சூரசம்ஹாரப் பெருவிழாவைக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்; தீமையை அழித்து நன்மை வெல்லும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வண்ணம், அதர்மத்தின் வழி நின்ற அசுரனை, எம்பெருமான் முருகன், வேல் கொண்டு வீழ்த்திய நிகழ்வைக் கொண்டாடும் நன்னாளாகிய, சூரசம்ஹாரப் பெருவிழாவைக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆறு நாட்கள் கடும் விரதம் இருந்து, கந்த சஷ்டி அன்று தன்னை வேண்டும் பக்தர்கள் அனைவருக்கும், நல்வாழ்வும், புகழும், குறைவற்ற செல்வமும், நல் ஆரோக்கியமும் எம்பெருமான் வேலவன் அருளட்டும். கந்தனுக்கு அரோகரா. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.