மதுரை, திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள பலகாரக் கடையை திமுக கவுன்சிலர் சூறையாடிய சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நகராட்சி வணிக வளாக கட்டடத்தில் பலகார கடை வைத்திருப்பவர் ஆறுமுகம். இவரது கடைக்கு வந்த திருமங்கலம் 1வது வார்டு திமுக கவுன்சிலர் காசி, ஆறுமுகத்திடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் இல்லை என்றதும், பலகாரத் தட்டுகளை கீழே கொட்டி சேதப்படுத்தினார் காசி. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஆறுமுகம் அளித்த புகாரில் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவும், ஆட்சிக்கு வந்த பின்னரும் பிரியாணி கடை, டீக்கடையில் ஓசியில் வாங்கி சாப்பிடுவார்கள். சாப்பிட்ட பின்னர் பணம் கேட்டால் கடைக்காரர்கள் முகத்திலேயே குத்துவார்கள். இதே போன்று சென்னை ஓட்டல் ஒன்றில் பிரியாணி சாப்பிட்ட திமுகவினர், பணம் கொடுக்க மறுத்து கடைக்காரர் முகத்திலேயே குத்தினர். இது மிகப்பெரிய சர்ச்சையான பின்னர் நேரடியாக சென்று ஸ்டாலின் மன்னிப்பு கேட்ட வரலாறு உண்டு. அதேதான், தற்போது மதுரையில் திமுக கவுன்சிலர் பலகாரக்கடையை சூறையாடியுள்ளார். இவர்கள் எப்போதும் திருந்தமாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.