சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வெள்ளநீரில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக வேளச்சேரி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
வங்கக்கடலில் இன்று ஃபெங்கல் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கும் என மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
இந்த நிலையில், திமுக அரசால் 4000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் பணிகளை (!) கடந்த ஆண்டு பெய்த கனமழை உணர்த்திவிட்டது. திமுக அரசு சொன்னதை நம்பி பலர் தங்களின் உடமைகளை வெள்ளநீரில் பறிகொடுத்தனர். மேலும், உணவு, குடிநீர் இன்றி பலர் மழை வெள்ளத்தில் சிக்கித்தவித்தனர்.
இதனை கருத்தில் கொண்டுதான் தற்போது அதிகமாக வெள்ளநீர் தேங்கும் வேளச்சேரி மக்கள் உஷாராகி விட்டனர். குறிப்பாக, வேளச்சேரியில் உள்ள டான்சி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள், தரை தளங்களை காலி செய்தனர். தங்களது உடமைகளை பாதுகாக்கும் நோக்கில், பொருட்களை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அதே வேளையில், மழை பாதிப்பு அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதால் படகுகளை வரவழைத்து, அவற்றை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இவை அனைத்தையும் ஆளும் திமுக அரசு செய்ய வேண்டும். மாறாக ஊழல் திமுக அரசை நம்பாமல் மக்கள் தாங்களாகவே தங்களை பாதுகாக்க ஆயுத்தமாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.