பாலஸ்தீனுக்காக இங்கு குரல் கொடுக்கும் மதசார்பின்மைவாதிகள் ஏன் வங்கதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஹிந்துக்களுக்காக குரல் கொடுக்கவில்லை? என, ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக வங்கதேச ஹிந்துக்கள் மீது ஜிகாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கோவில்கள் இடிக்கப்படுவது, ஹிந்துக்களின் வீடுகள் சூறையாடப்படுவது போன்ற செயல்களில் ஜிகாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: வங்கத்தில் சிந்துவது ஹிந்துவின் ரத்தமே..!! நம் உறவுகளை காக்க நாம் குரல் கொடுக்காவிட்டால் வேறு யார் குரல் கொடுப்பார்கள்? அந்நிய மதத்தவர் எண்ணிக்கையில் அதிகமானால் வங்கத்தில் இன்று நடப்பது நாளை பாரதத்தில் எங்கும் நடக்கும்..!!
எங்கோ இருக்கும் பாலஸ்தீனுக்காக, லெபனானுக்காக, ஈரானுக்காக இங்கு குரல் கொடுக்கும் மதசார்பின்மைவாதிகள் ஏன் வங்கத்தில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக இதுவரை குரல் கொடுக்கவில்லை?
திராவிட! கம்யூனிஸ! மதசார்பற்ற? அரசியல்வாதிகள் ஹிந்துக்களுக்கு துயரம் நிகழும் போது மட்டும் மௌனம் காப்பது ஏன்? ஹிந்து என்றாலே அவர்களுக்கு இரண்டாம்பட்சம் தான் என்பதை மீண்டும் ஒருமுறை அவர்கள் நிருபித்துவிட்டார்கள். வங்கதேச ஹிந்துக்களுக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்போம்..!! இவ்வாறு ஹெச்.ராஜா கூறியுள்ளார்.