8 வழிச்சாலை : இரட்டை வேடம் போடும் திமுக !

ஆட்சிக்கு வருவதற்கு முன்,வளர்ச்சி வேண்டாம், விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்று கூப்பாடு போட்ட திமுக இன்று
எட்டு வழிச்சாலை வேண்டும் என தில்லி சென்று வேண்டுகோளை வைத்துள்ளது மத்திய அரசிடம். இங்கு
எதிர்ப்புக்குரல் , தில்யில் அடக்கி வாசிக்கும் குரல் என்பதில் திமுக நாடக கம்பெனிக்கு நிகர் திமுகவே.
எட்டு வழிச்சாலை திட்டம் குறித்த நிலையை, தி.மு.க. தற்போது மாற்றியதாக கூறுவதும், இதை முன்பு தீவிரமாக
எதிர்த்தாக கூறுவதும் சரியானது அல்ல. சாலைகள் போட தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சி அல்ல, என தமிழக
பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கூறினார்.
அமைச்சர் வேலு, புதுடில்லியில் நேற்று மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த பின்
கூறியதாவது:
தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மெதுவாக நடப்பதால், அவற்றை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின்
அறிவுருத்தியதன்படி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்திலிருந்து, செங்கல்பட்டிற்கு, ‘எலிவேட்டட் காரிடார்’ எனப்படும் உயர்மட்டச் சாலை அமைக்கும் திட்டம்,
நீண்டநாட்களாக கிடப்பில் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து, திண்டிவனம் வரை எட்டு வழிச்சாலை வேண்டுமென்ற
கோரிக்கையும் உள்ளது. இவற்றை இந்த ஆண்டே துவக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
திருச்சி அருகே துவாக்குடி, ஸ்ரீபெரும்புதூரிலிருந்து பூந்தமல்லி மற்றும் மாதவரம் அருகே என மூன்று இடங்களில்
உயர்மட்டச்சாலை அமைக்க வேண்டுமென்ற நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, இந்த ஆண்டே
பணிகளை துவக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
சுங்கச் சாவடிகளின் ஒப்பந்தம் முடிவடைந்த இடங்களில், 40 சதவீதம் குறைக்கப்படும் என, மத்திய அரசு ஏற்கனவே
கூறியிருந்தது. இது குறித்து கேட்டதற்கு, உரிய நேரத்தில், அதை மாற்றியமைப்போம் என்று தெரிவித்துள்ளனர். சேலம்

  • உளுந்துார்பேட்டை சாலையை எட்டு வழிச்சாலையாக மாற்றும்படியும் கேட்டுள்ளோம்.

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை, தி.மு.க., தீவிரமாக எதிர்த்தது என்பதும், தற்போது நிலையை மாற்றிக்
கொண்டதாக கூறப்படுவதும் சரியானது அல்ல. சாலைகள் போட தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சி அல்ல. இந்த
திட்டத்திற்காக விவசாயிகளை அழைத்துப் பேசுங்கள் என்றுதான் கூறினோம்.
மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இத்திட்டம் குறித்து முதல்வர் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்
என்று குழம்பிய நிலையில் அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top