பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் காட்டு அபரிமிதமான அன்பும், நம்பிக்கையும் திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி
அமைக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது” என இருநாள் பயணமாக திரிபுரா சென்றுள்ள மத்திய உள்துறை
அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
“திரிபுரா தேசிய விடுதலை முன்னணி உடனான அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி
வைத்துள்ளோம். ஒரு காலத்தில் போதைப்பொருள் கடத்தல், வன்முறை மற்றும் தேசவிரோத நடவடிக்கைகளுக்கு
பெயர் பெற்ற திரிபுரா, தற்போது வளர்ச்சி சிறந்த உள்கட்டமைப்பு, விளையாட்டில் சாதனைகள், முதலீடுகள் மற்றும்
இயற்கை விவசாய நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் காட்டு அபரிமிதமான அன்பும், நம்பிக்கையும் திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி
அமைக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. திரிபுராவில் பாஜக தலையிலான அரசு பயங்கரவாதத்தை அழித்து,
வடகிழக்கு மாநிலத்தின் அனைத்து துறை வளர்ச்சியையும் கொண்டு வந்துள்ளதாக” மத்திய உள்துறை அமைச்சர்
அமித்ஷா தெரிவித்தார்.