தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (19.1.23) சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல், சரவெடியாக பதில் அளித்துள்ளார். அது வருமாறு: ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு : திரு. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திரு. ஜி.கே. வாசன் அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் தெரிவித்த கருத்துக்களை டில்லியில் மூத்த அமைச்சர்களுக்குத் தெரிவித்துள்ளேன். அவர்கள் தங்கள் பதிலைத் தெரிவித்த பிறகு எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம். தனக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது தொடர்பாக.
மத்திய அரசின் உளவுத்துறையின் அறிவுறுத்தலால் இது அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தத் தகவல்களின் அடிப்படையில் அளிக்கப்பட்டது என்ற விபரம் எனக்குத் தெரியாது. வல்லுநர்கள் கொண்ட ஒரு அமைப்பு தெரிவித்ததைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஈரோடு இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து : டில்லியிலிருந்து மூத்த தலைவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்த பிறகு நாங்கள் அறிவிப்போம். கூட்டணி
தர்மம் என்று ஒன்று உள்ளது. அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீண்டகால நோக்கில் இதைப் பார்க்க வேண்டும்.
ஈரோடு இடைத் தேர்தலில் பாஜகபோட்டியிடுவது குறித்து :
டில்லியிலிருந்து மூத்த தலைவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்த பிறகு நாங்கள் அறிவிப்போம். கூட்டணி
தர்மம் என்று ஒன்று உள்ளது. அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீண்டகால நோக்கில் இதைப் பார்க்க
வேண்டும்.
ஜல்லிக்கட்டுப்பற்றி :
விலங்குகள் நலனுக்காகப் போராடும் அமைப்பு ஜல்லிக்கட்டுக்கெதிராக வழக்குத் தொடுத்துள்ளனர். மத்திய அரசு ஜல்லிக்கட்டு தடைக்கெதிராக உள்ளது. மீண்டும் ஜல்லிக்கட்டைக் கொண்டு வந்தது பாஜக அரசு. மூன்று அமைச்சகங்கள் ஒன்றிணைந்து அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முழு ஆதரவு இதற்கு முக்கியக் காரணம். எனது தோட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கான மாடு வளர்ந்து வருகிறது. அடுத்த வருடம் எனது மாடு ஜல்லிக்கட்டுக்கு வரும். ஆளுநரின் தமிழகம் -தமிழ்நாடு பேச்சு பற்றி…. இது ஒரு உப்புச் சப்பில்லாத விஷயம் இரண்டு வார்த்தைகளுக்கும் வித்தியாசம் இல்லை,
ஆளுநர் இதற்கான விளக்கம் கொடுத்துள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பூதக் கண்ணாடி வைத்து இதைப் பார்க்கிறார்கள். எந்தப் பொருளில் சொன்னார் என்று ஆளுநர் விளக்கியுள்ளார். சென்னை- திருச்சி இண்டிகோ விமானத்தில் நடந்த நிகழ்ச்சி பற்றி… டிசம்பர் 10 அன்று காலையில் புயலின் தாக்கம் இருந்தது. அன்று திருச்சியில் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஒரு நிகழ்ச்சி இருந்தது. நானும் அவருடன் பயணித்தேன். தேஜஸ்வி சூர்யாவின் இருக்கை வலது பக்கம் அவசரகாலக் கதவின் அருகில் இருந்தது. காலை 10 மணிக்குக் கிளம்ப வேண்டிய விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது. தேஜஸ்வி சூர்யா அவர்கள் தனது இருக்கைக்கு மேலுள்ள காற்று வரும் சாளரத்தை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது ‘விமானத்தின் அவசரகாலக் கதவு திறந்துள்ளது போல் உள்ளது; கொஞ்சம் கவனியுங்கள்’ என்றார். உடனே விமானப் பணிப் பெண்ணுக்கும் விமான ஓட்டிக்கும் விஷயத்தைச் சொன்னோம். அவர்களும் வந்து பார்த்தனர்.
பொறியாளரை வரவழைத்தனர். அவர் எமெர்ஜென்சி கதவை அப்படியே வெளியே எடுத்து மீண்டும் பொருத்தினார்.
இதனால் விமானத்தின் உட்புறம் காற்றின் அழுத்தம் குறைந்திருக்க வாய்ப்பிருந்ததால் மீண்டும் அதை அதிகரிக்க வேண்டும்’ என்று கூறினார். இதனால் விமானம் புறப்படுவது மேலும் ஒரு முக்கால் மணி நேரம் தாமதமாகியது. இது தொடர்பான தகவல் பதிவு செய்யப்பட்டது. தன்னால் இந்தத் தவறு நேர்ந்திருக்கலாம் என்று நினைத்த தேஜஸ்வி சூர்யா எல்லாப் பயணிகளிடமும் சென்று தவறு நேர்ந்ததைத் தெரிவித்து மன்னிப்பையும் கோரினார். விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனர் அலுவலகம் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளன. ஆனால் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இதைப் பெரிதுபடுத்துகின்றன. ‘ஒரு விதத்தில் இது நடந்தது நல்லதாகப் போய் விட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பு இது கண்டுபிடிக்கப்பட்டு சரி
செய்யப்பட்டது நல்லது ‘என்று பயணிகள் கூறினர். இந்த விமானத்தில் திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் பயணம் செய்தனர்.
குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் காணொளி பற்றி…. பிபிசி எப்போதுமே இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கும். இது போலியான தகவல். இதைச் செய்த ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். ஏதோ புதிதாகக் கண்டு பிடித்துள்ளோம் என்பது போல் பேசியுள்ளனர். குஜராத் கலவரம் தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்றம் வரை சென்று குற்றவாளிகள் தண்டனை அனுபவித்துக்
கொண்டுள்ளனர். இது வெளி நாட்டில்தான் ஒளிபரப்பப்பட்டது. இந்தக் காணொளியைத் தாங்கள் பார்த்ததாக வெளிநாட்டிலுள்ள பாஜக நண்பர்கள் எனக்குத் தெரிவித்தனர். நான் மத்திய அரசுக்கு இதைப் பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இப்போது அது நீக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு நிலைமை பற்றி… 2022 ல் தமிழகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் கொலை, கற்பழிப்பு தனிமனிதருக்கெதிரான வன்முறைகள் நடந்தன. காவல் துறை டிஜிபி 2022 புள்ளி விவரங்களை 2021 புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டு குற்றங்கள் மிகவும் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய பதவியில் உள்ள, 30 வருட அனுபவம் உள்ள போலீஸ் அதிகாரி எப்படி இவ்வாறு தவறான தகவலை அளிக்கிறார்? 2021ல் கொரோனாவின் தாக்கம், ஊரடங்கு போன்றவை இருந்தன மக்கள் அவ்வளவாக வெளியே வரவில்லை. ஆகவே குற்றங்கள் எப்படி அதிகமாக இருக்கும்?
அவர் 2019 ன் புள்ளி விவரங்களுடன் ஒப்பு நோக்கியிருக்க வேண்டும். அப்போது 2022 ல் குற்றஙகள் எவ்வளவு அதிகரித்துள்ளன என்று தெரியும்.
இது தொடர்பான புள்ளி விவரங்களை அரசு வெளியிட வேண்டும். அது என்னிடம் உள்ளது. அரசு வெளியிடவில்லை என்றால் தக்க சமயத்தில் வெளியிடுவேன்.
‘காவல் நிலையத்துக்குச் சென்றால் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்’ என்று திரு. ஸ்டாலின் சொன்னது பற்றி : இந்த அறிவுரையைக் காவல் துறைக்கு வழங்குவதை விட திமுக ஒன்றியச் செயலாளர்களுக்கு வழங்க வேண்டும். ‘நீங்கள் காவல் நிலையத்தின் பக்கமே போகாதீர்கள். தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றிவிடுவேன்’ என்று காவல் அதிகாரிகளை மிரட்டாதீர்கள்’ என்று சொல்ல வேண்டும். கற்பழிப்பு, கூட்டு கற்பழிப்பு இவை 2022 ல் மிக அதிகமாக நடை பெற்றுள்ளன. காவல் துறையைத் தனது கையில் வைத்திருக்கும் முதல்வர் பொறுப்பு ஏற்று விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகம் எவ்வாறு கலவர பூமியானது என்று கூற வேண்டும். திமுகவினர் காவல் நிலையங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். தன்மீது கூறப்படும் அவதூறு பற்றி… தினமும் ட்விட்டரைத் திறந்தால் திமுக வின் தகவல் தொழில் நுட்பப் பிரிவினர் திமுகவின் ஆதரவாளர்கள், திமுகவிடம் பணம் வாங்கியவர்கள் என்று பத்தாயிரம் பேர் எனக்கு எதிராக எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் காலையிருந்து இரவு வரை இதற்கே
நேரம் போய் விடும்.
கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் என்னைப் புகழ்ந்தால் ஏன் வெளியேற வேண்டும்? ஒன்றும் இல்லாத விஷயங்களையும், பொய்யான தகவல்களையும் திமுக கூறிக் கொண்டிருந்தால் நான் ஏன் பதில் கூற வேண்டும்? விமானத்தில் நடந்த நிகழ்ச்சி பற்றிய திமுகவினரின் பொய்களும் இது போலத்தான்.
தொகுப்பு: இரா.ஸ்ரீதரன்