சில மாதங்களுக்கு முன்னர்கூட திருச்சி அருகில் உள்ள திருச்செந்தூரை பகுதியில் ஹிந்துக்கள் காலம் காலமாக அங்கே வாழ்ந்து வருகிறார்கள். அங்குள்ள கோவில் நிலமும், அந்த பகுதியில் உள்ள மற்ற பகுதிகளும் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என மாவட்ட பத்திரப்பதிவுத்துறை தெரிவித்தது. இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பின் பாஜக தலையிட்டு, இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டங்களை முன்னெடுக்கும் என அறிவித்தபின் தமிழக அரசு உரிய அரசு ஆணையை பிறப்பித்து அடங்கியது.இந்தநிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 52 ஏக்கர் நிலத்தை வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என மாவட்ட நிர்வாகம் ஆணை வழங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழக பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா ” ”தமிழகத்தில் நடப்பது ஸ்டாலின் அரசாங்கம் அல்ல; மாலிக் காபூர் அரசாங்கம்,” என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்த ஹெச். ராஜா பின், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நடப்பது ஸ்டாலின் அரசாங்கம் அல்ல; மாலிக் காபூர் அரசாங்கம். நாடு முழுவதும், ‘2 ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழலை போல, ஏழு மடங்கு கொண்ட, 12.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என, அபகரிக்கப்பட்டுள்ளது. வேப்பூர் பகுதியில் நீதிமன்றத்தின் மூலம், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த, 53 ஏக்கர் விளைநிலத்தை, எவ்வித
ஆதாரங்களும் இல்லாமல், வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என ஆணை தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு வழங்கி, மாவட்ட நிர்வாகம் தவறு செய்துள்ளது.
அடுத்த, 24 மணி நேரத்திற்குள் அந்த நிலங்களை மீட்டு, விவசாயிகளிடம் வழங்கவில்லை என்றால், காலவரையற்றb போராட்டம் நடத்தப்படும்.
என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்டாலின் அரசு, பிராமண விரோத அரசு என்பது தவறு, மொத்த இந்துக்களுக்கும் விரோதமான அரசு சமீப காலமாக, ஹிந்துக்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக, ஒரு லட்சம் புகார்கள் எனக்கு வந்துள்ளன. அவற்றை ஒருங்கிணைந்து, உச்ச நீதிமன்றம் மூலம், ஹிந்துக்கள் சொத்தை மீட்க, நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.