ஸ்ரீ ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஸ்ரீ ராமர் பாலம், தமிழகத்தின் பாம்பனுக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே, கடலுக்குள் 30 கி.மீ. நீளத்துக்கு அமைந்துள்ளது. இந்தப் பாலம், தேவி சீதையை மீட்க ஸ்ரீ ராமர் கட்டிய பாலம் என்று ஹிந்துக்களால் நம்பப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2005-ம் ஆண்டில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டம் ஸ்ரீ ராமர் பாலத்துக்கு சேதம் விளைவிப்பதாக இருந்ததால் இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் திமுக உட்பட்ட ஹிந்து விரோத கட்சிகள் ஸ்ரீ ராமரை அவதூறாக பேசினார்கள். அதனைத்தொடர்ந்து, கொதித்தெழுந்த இந்துக்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு வழக்காக சென்றது. ஸ்ரீ ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக
அறிவிக்கவேண்டும் சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று டாக்டர் சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சேது சமுத்திரக் கால்வாய் திட்டப் பணிகளுக்கு தடை விதித்து 2007-ம் ஆண்டில் உத்தரவிட்டது. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை மீண்டும் வேகம் பெற்றது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா அமர்வு முன் நேற்று மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற தொடங்கியுள்ளது.
மத்திய அரசு ஸ்ரீ ராமர் பாலத்தை புராதனச் சின்னமாக்க தேவையான நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாக உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்திருப்பது ஹிந்து விரோத அரசியல் கட்சிகளுக்கு அடி வயிற்றை கலக்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெரும் தொகையை பார்க்கலாம் என நினைத்த திமுகவிற்கும் மத்திய அரசின் நகர்வு பேரிடியாய் விழுந்துள்ளது.