ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து வரும் 31-ம் தேதி நடக்க உள்ள மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில்
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “எஸ்.ஜி.சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அமெரிக்க அரசின் சர்வதேச இளம் அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி முகாமுக்கு, தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநில தலைவர் அண்ணாமலையும் அவருக்கு
வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து வரும் 31-ம் தேதி நடக்க உள்ள
மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று மாநில துணைத்
தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“எஸ்.ஜி.சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அமெரிக்க அரசின் சர்வதேச இளம் அரசியல்
தலைவர்களுக்கான பயிற்சி முகாமுக்கு, தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில செயலாளர்
எஸ்.ஜி.சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநில தலைவர் அண்ணாமலையும் அவருக்கு
வாழ்த்து தெரிவித்துள்ளார். 1960-ல் வாஜ்பாய்க்கும், 1993-ல் பிரதமர் மோடிக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது. தற்போது 3-வது முறையாக, எஸ்.ஜி.சூர்யாவுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் எழுதிய வீர சாவர்க்கர் வரலாற்று குறிப்பு நூல், வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இவர் 7 புத்தகங்கள் எழுதியுள்ளார். ஒரு தமிழர், பாஜக செயலாளர் இந்த முகாமில் கலந்து கொண்டு, அவர் பெறும் அனுபவமும், அறிவும் இந்திய நாட்டுக்கும், பாஜகவின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக அமையும். அமைச்சர் நாசர், கல்லை எடுத்து வீசுகிறார். அமைச்சர் நேரு எங்கு சென்றாலும் அடிக்கிறார். இதற்கெல்லாம் உரிமை கொடுத்தது யார்? ஆளுநர் மாளிகையில் அண்ணாமலையும், முதல்வர்
ஸ்டாலினும் கை குலுக்கிக் கொண்டது குறித்து கேட்கிறீர்கள். மனிதநேயம், பண்பாட்டின்
அடிப்படையில் அரசியல் தலைவர்கள் கை குலுக்கிக் கொள்வதை விமர்சிக்க கூடாது.
பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் அண்ணாமலை தலைமையில் வரும் 31-ம் தேதி நடக்க
உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து இக்கூட்டத்தில்
முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்றார். பின்பு பேசிய மாநில செயலாளர் எஸ். ஜி . சூர்யா, “கடந்த முறை இஸ்ரேலில் நடந்த இளம் அரசியல் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றேன். அதேபோல, தென் கொரியாவில் நடந்த மாநாட்டிலும் பங்கேற்றேன். இந்த முகாமில் அமெரிக்க நீதித்துறை, அரசியல் என பல அம்சங்கள் குறித்தும் பயிற்சி வழங்கப்படும். அங்கு பயிற்சி பெற்று வந்த பிறகு, அதுபற்றி அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன்” என்றார்.