அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயத்தின் தாக்கம்;
இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் 13-ஏ சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்றும், இதை முழுவதுமாக அமல்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் பிப். 8-ஆம் தேதி சிறப்பு உரை நிகழ்த்தப்படும் என்றும் அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார். இலங்கை தமிழர் பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இலங்கை நாடாளுமன்ற தலைவர், பிரதமர், முன்னாள் அதிபர்கள் மகிந்த ராஜபட்ச, சிறீசேனா, தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, ‘தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-ஏ பிரிவு சட்டத்திருத்தம் இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்கெனவே இடம் பெற்றுவிட்டது. இதை முழுமையாக அமல்படுத்த வேண்டியது அதிபராகிய எனது பொறுப்பு.
நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் 13.ஏ !
இதை அமல்படுத்த விரும்பவில்லை என்றால் அந்தச் சட்டத்தை நீக்க நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் ஒற்றையாட்சி நடைபெறுகிறது. கூட்டாட்சிக்கு நான் எதிரானவன். ஏனென்றால், இலங்கை மாகாண கவுன்சில்களுக்கு லண்டன் மாநகராட்சிகளைவிட குறைந்த அதிகாரம்தான் உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் 13-ஏ சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த பிப்ரவரி 8-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை நிகழ்த்துவேன். ராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் தமிழர் நிலங்களை விடுவிப்பது உள்ளிட்ட தமிழர்கள் பிரச்னைகளுக்கும் அதில் தீர்வு காணப்படும். நாட்டை துண்டாட விடமாட்டேன். இந்த விவகாரத்தில் பிற அரசியல் கட்சிகளின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன” என்றார்.
பொருளாதார சிக்கலில் தவித்துவரும் இலங்கைக்கு, இந்தியா இதுவரை ரூ. 48,000/- கோடியை வழங்கி உதவி செய்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சமீபத்திய இலங்கை விஜயத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து இலங்கை அதிபர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருடன் விவாதித்திருந்தார். அதில் குறிப்பிடதகுந்தது, அங்குள்ள தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தம் 13 – ஏ வை அமுல் படுத்துவதாகும். இங்குள்ள பிரிவினைவாத கட்சிகள் எல்லாம் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்தும், ஆதாயம் பெற்றும் நாடகம் நடத்திவரும் வேளையில், பாஜக அவர்களின் வாழ்வு. மேம்பட சட்ட ரீதியாக, ராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்து வருவதை உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.