யார் என்ன முழக்கமிட்டாலும் அவதூறு பரப்பினாலும் எங்களது மக்கள் நலப்பணி தொடரும் என குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதிலளித்தார். மேலும் அவர் தனது உரையில் தெரிவித்ததாவது:
முந்தைய காலத்தைப் போலல்லாமல், “பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரமானத் தீர்வுகளை வழங்கி அவர்களை அதிகாரப்படுத்துவதே எங்கள் அரசின் நோக்கமாகும்” என்று பிரதமர் குறிப்பிட்டார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பாக இருந்த நேரத்தில் முந்தைய அரசுகளுக்கு வேறு முன்னுரிமைகளும், நோக்கங்களும் இருந்தன. இன்று நாங்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை நோக்கி முன்னேறி வருகிறோம். தண்ணீர் பிரச்சினை குறித்து எடுத்துக்காட்டிய பிரதமர், வெறுமனே துவக்கியதுடன் நின்றுவிடாமல், தண்ணீர் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் முழுமையான ஒருங்கிணைந்த அணுகுமுறை, தண்ணீர் நிர்வாகம், தரக்கட்டுப்பாடு, தண்ணீர் சேமிப்பு, புதுமையான பாசனம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜன்தன் – ஆதார் – மொபைல் மூலம் நேரடிப் பணப்பரிமாற்றம் உள்கட்டமைப்பு திட்டமிடுதல், பிரதமரின் விரைவுசக்தி பெருந்திட்டத்தின் மூலம் செயலாக்கம் ஆகியவை நிதி உள்ளீட்டில் நிரந்தரத் தீர்வுகளை உருவாக்க எடுக்கப்பட்ட இதேபோன்ற நடவடிக்கைகளாகும். என்றார்.
உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தையும், நவீன இந்தியாவை கட்டமைப்பதற்கான வேகத்தையும், அளவையும் நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் என்று பிரதமர் கூறினார். தொழில்நுட்பத்தின் ஆற்றல் மூலம் நாட்டின் பணிக்கலாச்சாரம் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் வேகத்தை அதிகரிப்பதிலும், அளவை உயர்த்துவதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
மகாத்மா காந்தி தகுதி, அன்புக்குரியவர்கள் என்ற வார்த்தைகளை அடிக்கடி கூறுவார்கள். நாங்கள் தகுதி என்ற பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம் எனப் பிரதமர் தெரிவித்தார். அரசு தேர்ந்தெடுத்த பாதையுடன் முன்னுரிமை நின்றுவிடாது என்று கூறிய பிரதமர், சாதாரண மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற இரவு-பகலாக இடையறாமல் உழைத்து வருகிறோம். மேலும்,
விடுதலையின் அமிர்த காலத்தில் உச்சத்தை எட்ட முக்கியமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகப் பிரதமர் விளக்கினார். நாட்டில் ஒவ்வொரு பயனாளிக்கும் 100 சதவீத பயன்கள் சென்றடைய அரசு முயற்சிகளை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதுதான் உண்மையான மதச்சார்பின்மை, இது பாகுபாடு மற்றும் ஊழலை ஒழித்துள்ளது.
பல பத்து ஆண்டுகளாக பழங்குடியின சமுதாயத்தினரின் மேம்பாடு புறக்கணிக்கப்பட்டது. அவர்களது நலனுக்கு நாங்கள் உயர் முன்னுரிமை வழங்கினோம். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில்தான் பழங்குடியினர் நல அமைச்சகம் என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அந்த அமைச்சகத்தின்கீழ், பழங்குடியினர் நலனுக்கான உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்தந்தையம் தெரிவித்தார்.
சிறு விவசாயிகள், இந்திய வேளாண் துறையின் முதுகெலும்பு என்று குறிப்பிட்ட பிரதமர், இவர்களின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் பாடுபட்டு வருகிறோம் என்றார். சிறு விவசாயிகள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டதாகப் பிரதமர் கூறினார். சிறு விவசாயிகளின் தேவைகளில் கவனம் செலுத்தும் தற்போதைய அரசு அவர்களுக்கும், சிறு வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோருக்கும் பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். மகளிருக்கு அதிகாரமளிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றியும் விவரித்த பிரதமர், இந்தியாவில் பெண்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும், வாழ்க்கையை எளிதாக்குவதையும், கௌரவத்தையும், அதிகாரமளித்தலையும் உறுதி செய்வதற்கான அரசின் முயற்சிகள் பற்றியும் பேசினார்.
இந்தியாவின் விஞ்ஞானிகளை, புதிய கண்டுபிடிப்பாளர்களை, தடுப்பூசி தயாரிப்பாளர்களைக் குறைகூற சிலர் முயற்சி செய்த துரதிருஷ்டமான சம்பவங்கள் குறித்து அவையின் கவனத்தை ஈர்த்த பிரதமர், “நமது விஞ்ஞானிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களின் நிபுணத்துவம் காரணமாக மருந்து தயாரிப்பில் உலகின் குவிமையமாக இந்தியா மாறியிருக்கிறது” என்றார். அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், ஆய்வுக்கான சோதனைக் கூடங்கள் போன்ற நடவடிக்கைகள் மூலம் அறிவியல் மனப்பான்மை வளர்க்கப்படுவது பற்றியும் பிரதமர் பேசினார். அரசால் உருவாக்கப்பட்ட வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்காகவும், தனியார் செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுவதற்காகவும், இளைஞர்களையும், விஞ்ஞானிகளையும் அவர் பாராட்டினார். சாமானிய மக்களுக்கு அதிகாரமளிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உலகின் தலைமையை நாடு தக்கவைத்துக் கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் வெற்றி இன்று ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று பிரதமர் கூறினார். செல்பேசிகளை இந்தியா இறக்குமதி செய்த காலத்தை நினைவுகூர்ந்த அவர், இன்று, மற்ற நாடுகளுக்கு செல்பேசிகளை ஏற்றுமதி செய்யும் பெருமையை நாம் பெற்றிருக்கிறோம்.
2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என இந்தியாவை மாற்றுவது நமது தீர்மானமாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். நமக்குத் தேவையான வாய்ப்புகளைக் கண்டறிவதற்கு அரசு மேற்கொள்ளும் குறிப்பிடத்தக்க நடவடிவக்கைகளை அவர் எடுத்துரைத்தார். இந்தியா மாபெரும் பாய்ச்சலை மேற்கொள்ளத் தயாராக உள்ளது; இனிமேல் அது பின்னடைவை சந்திக்காது” என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார்.