கர்நாடக மாநிலம் பெலகாவியில் ரூ.2,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று(27.02.2023) அடிக்கல் நாட்டினார். கர்நாடகாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்து. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 13-வது தவணைத் தொகையாக ரூ.16,000 கோடியை விடுவித்தார்.
இதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, ” பெலாகாவியிற்கு வருவது என்பது புனித யாத்திரைக்கு குறைந்தது அல்ல, காலனியாதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்த சித்தூரின் ராணி செல்லம்மா, புரட்சியாளர் க்ரந்திவீர் சங்கொலி ராயண்ணா ஆகியோரின் மண் இது.
பெலகாவி 100 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்டார்ட்-அப்புகளின் தாயகமாக திகழ்ந்தது என்றும் கூறினார். பாபுராவ் புசல்கர் ஏற்படுத்திய தொழிற்சாலை பல்வேறு தொழில்களுக்கு அடிப்படையாக இருந்தது. கர்நாடகா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில், வாரிசு அரசியல் தலை விரித்து ஆடுகிறது. இதை வேருடன் அறுக்க வேண்டும். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அங்கு வெயில் வாட்டி வதைக்கிறது. அவருக்கு குடை பிடிக்காமல், வேறு யாருக்கோ பிடிக்கப்பட்டது. சொந்த கட்சி தலைவர் மீதே காங்கிரஸ் தலைவர்களுக்கு மரியாதை இல்லை.
பிரதமர் கிசான் திட்டத்திலிருந்து சிறப்பு நிதியை நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் பெற்றுள்ளனர். ஒரு பொத்தானை அழுத்தியதன் மூலம் ரூ.16,000 கோடி நாட்டின் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை பார்க்கும் போது, ‘ரிமோட் கன்ட்ரோல்’ யாரிடம் இருக்கிறது என்பது பொது மக்களுக்கு நன்றாக புரிகிறது.
கர்நாடகாவின் மாபெரும் காங்கிரஸ் தலைவர்கள் நிஜலிங்கப்பா, வீரேந்திர பாட்டீல் ஆகியோரை, மாநில தலைவர்களே மதிக்கவில்லை. மக்கள் தாமரையை தொடர்ந்து மலர வைக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்