சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் மகளீருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சோதனைகளை எல்லாம் சாதனையாக மாற்றும் வலிமைமிக்க மகளிருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
“எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்” என்ற பாரதியின் கனவுக்கேற்ப, சமூகம், பொருளாதாரம், கலை, கலாச்சாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் நம் சகோதரிகளால் நம் நாடே பெருமை கொள்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
நமது வலிமையின் மூலம், நமது வாழ்க்கையை கட்டமைக்கும், சமுதாயத்தின் நன்மைக்காக தன்னை அர்ப்பணிப்பவர்கள் பெண்கள் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். நமது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகியுள்ள பெண்களுக்கு தலைவணங்குவோம் எனவும், சமநிலை சமுதாயத்தை உறுதி செய்வோம் எனவும் தனது டிவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.