சமுதாய சேவை என்ற ஒற்றை சொல்லுக்கு அடையாளமாக வாழ்ந்தவர் பேராசிரியர் பரமசிவம். மதுரை மதுரா கல்லூரியில் வணிகவியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர். மாணவர்களின் கல்விக்காக தனது வருமானத்தில் பெரும் தொகையை வழங்கியவர். விளையாட்டு வீரர். இவர்மட்டுமல்ல இவரது குடும்பத்தினர் அனைவரும் தீவிர தேசிய ஆன்மீக சிந்தனை கொண்டவர்கள்.
பேராசிரியர் கே.ஆர் பரமசிவன் உட்பட இவரது சகோதரர்கள் 4 பேர் சமுதாயத்திற்காக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர்கள். கே.ஆர் பரமசிவன் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் மாநிலத் துணைத் தலைவர் & மாநிலத் தலைவராக பொறுப்பேற்று இயக்க வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்தவர். எப்போதும் சிரித்த முகம். கோபம் என்பதைப் பார்க்கவே முடியாது. யாராவது கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று அறிந்தாலே போதும் அவர்களை தேடிச் சென்று உதவி செய்வதை இயல்பாகக் கொண்டிருந்தார்.
1998 ஆம் வருடம் மார்ச் 28 அன்று ஶ்ரீ ராகவேந்திரர் கோயிலுக்குச் சென்று விட்டு இரவு 9 மணி அளவில் மதுரை ஷெனாய் நகரில் உள்ள வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு மிக அருகில் சில மீட்டர் தூரத்தில் சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப் பில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமை யில் அமைந்த அரசு வெற்றி பெற்றதை சகித்துக் கொள்ள இயலாத மதவெறி பிடித்த ஜிஹாதி யினர் இப்படுகொலையை செய்தனர்.
அவரது மறைவுக்கு தமிழ்நாட்டில் இருந்து எந்தவொரு அரசியல் கட்சியும் கண்டனமோ, வருத்தமோ கூட தெரிவித்து அறிக்கை வெளியிடவில்லை. எனினும் பேராசிரியர் நினைவாக ஏபிவிபி அமைப்பினரால் ஆண்டுதோறும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 25வது ஆண்டாக இன்றும் இந்த முகாம் நடைபெறுகிறது. மதுரை மண்ணில் அவர் சிந்திய ரத்தத்துக்கு, அவர் விதைத்த சமுதாயப் பணி 25 ஆண்டுகளாக இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் பேராசிரியர் நினைவுநாளை மாநில தலைவர் அண்ணாமலை நினைவுகூர்ந்துள்ளார். ஜாதி வேறுபாடுகளைக் களைவதற்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் உழைத்த பேராசிரியரை போற்றுவதாக தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.