திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஊழல் பட்டியல் ஏப்.14ம் தேதி வெளியிடப்படும் என தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் அரசியல் வாழ்க்கையில் இதுவரை செய்த ஊழல்கள் அதன்மூலம் அவர்கள் சேர்த்த சொத்துக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆவணங்களுக்கும் ஏப்.14ம் தேதி வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
மேலும் அண்மையில் தென்காசியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், வெறும் 37 திமுக நிர்வாகிகளுடைய சொத்து மதிப்பு மட்டும் 2 லட்சம் கோடியை தாண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியான நாள் முதலே திமுக நிர்வாகிகள் வயிற்றில் புளி கரைக்க தொடங்கி விட்டது. இன்னும் ஒரு நாளே எஞ்சியுள்ள நிலையில் யாருடைய பெயரை முதலில் வெளியிடப்போகிறார் என்ற அச்சத்தில் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.
இந்நிலையில் இதனை எப்படியாவது சமாளிப்பதற்காகவும் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும், பாஜகவுக்கு எதிராக பல்வேறு புது புது பிரச்சனைகளை கிளப்பும் திராவிட மாடல், பொய் வழக்குகள் போட்டு பாஜகவினரை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பாஜக தொழில்துறை மாநில துணை தலைவர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள செல்வகுமார் #திராவிடமாடலின் மீதும், சாராய அமைச்சர் மீதும் சமூக வலைதளங்களில் /தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்தார். அண்மைகாலமாக கோவையில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், இதனை தடுக்க தவறிய அமைச்சர் செந்தில் பாலாஜியை கஞ்சா அமைச்சர் எனவும் விமர்சித்திருந்தார். இதனை காரணமாக வைத்து செல்வகுமாரை, #திராவிடமாடல் அரசு கைது செய்துள்ளது
செல்வகுமாரின் கைதுக்கு தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை எல்லாம் அடக்கி, கருத்து சுதந்திரத்தை முடக்கிவிடலாம் என திறனற்ற திமுக அரசு கனவு காணுவதாக தெரிவித்துள்ள அவர், பாஜக தொண்டர்கள் இதற்கெல்லாம் அஞ்சமாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.