திமுக பைல்ஸ் 2வது பாகத்தில் ரூ.5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பாஜக தலைவர் கே.அண்ணாமலை வழங்கியிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.
திமுகவினரின் இரண்டாவது சொத்துப்பட்டியலை (டி.எம்.கே. பைல்ஸ் 2) பாஜக தலைவர் கே.அண்ணாமலை இன்று (ஜூலை 26) வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியது. இதனால் அனைத்து ஊடகங்களும், பத்திரிகைகளும் கமலாலயத்தை நோக்கியே பரபரப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதனிடையே, இன்று மாலை 3.30 மணியளவில் அவர் கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது திமுகவினர் சேர்த்து வைத்துள்ள சொத்துப் பட்டியல் பற்றிய விவரங்களை பெரிய பெட்டியில் வைத்து வழங்கினார். தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்கள் , வி.பி துரைசாமி, டால்ஃபின் ஸ்ரீதர், பால் கனகராஜ், பொதுச் செயலாளர் கரு நாகராஜன், மாநில நிர்வாகிகள் ஏஜி சம்பத், கராத்தே தியாகராஜன் ஆகியோர் அவருடன் இருந்தனர்.
இது பற்றி அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநரிடம், திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக பைல்ஸ் பகுதி 2வது ஆவணங்களையும், மேலும், ரூ.5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது பற்றி அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 14ம் தேதி பைல்ஸ் முதல் பாகத்தில் திமுகவினர் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்ற பட்டியலை வெளியிட்டிருந்தார் அண்ணாமலை.
அதில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவையும் வெளியிட்டார்.
ஜெகத்ரட்சகன் -50219.37 கோடி
எ.வ.வேலு – 5,442.39 கோடி
கே.என்.நேரு – 2,495.14 கோடி
கனிமொழி- 830.33 கோடி
கலாநிதிமாறன் – 12,450 கோடி
டி.ஆர்.பாலு – 10,841.10 கோடி
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் – 579.58 கோடி
கலாநிதி வீராசாமி – 2,923.29 கோடி
பொன்முடி மற்றும் கவுதம சிகாமணி – 581.20 கோடி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி 1,023.22 கோடி
உதயநிதி – 2,039 கோடி
அண்ணாமலையின் திமுகவின் லஞ்ச ஊழலுக்கு எதிரான போராட்டம், அகில இந்திய அளவில் அவருக்கு மிகப்பெரும் செல்வாக்கு ஏற்படுத்தி இருப்பதாக பிற மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துறை இல்லா அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது, அதைத் தொடர்ந்து அவர் நடத்திய நாடகங்கள், அவரை நீக்க வேண்டும் என முதல்வருக்கு ஆளுநர் அனுப்பிய கடிதம், மத்திய அமலாக்க துறைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின், ‘ திருப்பி அடித்தா …மோதிப்பார்…’ என்றெல்லாம் பேசி தரமில்லாமல் அச்சத்தில் வெளியிட்ட காணொளி, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து ஆளுநருக்கு எதிராக முதல்வர் அளித்த மனு, என அனைத்து நிகழ்வுகளின் பின்னணியிலும் அண்ணாமலையின் பெயர் தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வந்தது.
அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவரது தொழில் சார்ந்த இடங்களில் அமலாக்கத் துறை செய்த சோதனை, அதைத் தொடர்ந்து அடுத்து எந்தெந்த அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை பாயும் என்ற ஊகங்கள் என தமிழக அரசியல் பரபரப்பான கட்டத்தை எட்டியது. இவற்றுக்குப் பின்னணியிலும் அண்ணாமலை பெயர் தவறாமல் இடம் பெற்றது.
அண்ணாமலை பாத யாத்திரை ஆரம்பிக்கும் முன் எத்தனை திமுக அமைச்சர்கள் சிறை யாத்திரைக்கு சென்று வருவார்கள் என்று தமிழகமெங்கும் பரவலாக பேச்சுகள் வலம் வந்தன. இந்த பேச்சுகள், திமுக உபிக்களிடம் வேதனையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இப்போது அண்ணாமலை பாத யாத்திரையை ஆரம்பித்து விட்டார்…இன்னும் எத்தனை அத்தனை திமுக ஃபல்ஸ் வெளிவருமோ….யார் யார் உள்ளே போகப் போகிறார்களோ ?
எது எப்படியாயினும் ஒன்று உறுதி, இந்த யாத்திரை திமுகவை இறுதி யாத்திரைக்கு இட்டுச் செல்லும் என்பது தான் அது!