விலைவாசி உயர்வு, வேலையில்லா இளைஞர்கள் என்று பலர் தமிழகத்தில் உள்ள நிலையில், 6,000 கிலோ மட்டன், 4,000 கிலோ சிக்கன், 30,000 முட்டையுடன் திருச்சியில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்காக தயாரான பிரியாணிதான் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.
திருச்சியில் நேற்று (ஜூலை 26) திமுக சார்பில் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருகை புரிபவர்களுக்காக மட்டன், சிக்கன், முட்டை என அசைவ உணவு விடியல் அரசின் அமைச்சர் நேரு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக பிரபல ஓட்டல் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைத்தே பிரியாணி டன் கணக்கில் தயாரிக்கப்பட்டு வந்து 15 மாவட்டத்தை சேர்ந்த திமுகவினருக்கு சுடச்சுட பரிமாறப்பட்டுள்ளது. பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள சிக்கன் கிரேவி, அவித்த முட்டை, தயிர் பச்சடி என அமர்க்கள படுத்தியுள்ளனர்.
மாலை 4 மணிக்குதான் பயிற்சி கூட்டம் என்றாலும் மதிய சாப்பாட்டுக்கே வாக்குச்சாவடி முகவர்கள் கேர் பொறியல் கல்லூரி வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ,தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் மத்திய தஞ்சாவூர் தெற்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய, திருச்சி வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, புதுக்கோட்டை வடக்கு என 15 மாவட்டங்களில் இருந்து வந்த திமுகவின் முகவர்களை திக்குமுக்காடும் வகையில் விருந்தை போட்டு அசத்தி விட்டாரே என்று நேருவை புகழ்வதை பார்க்க முடிகிறது.
தமிழகத்தில் அன்றாடம் பயன்படுத்தப்படும் உணவு பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவில் உள்ள நிலையில் திமுக கூட்டத்திற்கு இத்தனை ஆடம்பர செலவில் எப்படி விருந்து வைக்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்திலும் ஊழல் மலிந்து விட்டது. மக்களின் வரிப்பணத்தை பல வழிகளில் சுரண்டி வைத்துள்ள திமுக அமைச்சர்கள் இது போன்று ஆடம்பர செலவு செய்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என நினைக்க வைக்கிறது.
-வ.தங்கவேல்