சென்னை, ராமாபுரத்தில் கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சாதாரண பெண்கள் மட்டுமின்றி பெண் போலீசாருக்கும் தொடர்ந்து திமுகவினர் பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்து வருகின்றனர். இது போன்றவர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் கனிமொழி நடத்திய மகளிர் ஆர்ப்பாட்டத்தில், பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த பெண் போலீசாரிடம் இரண்டு திமுகவினர் தகாத முறையில் நடந்து கொண்டனர். இந்த விஷயம் வெளியில் தெரிந்த பின்னரும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இந்த விடியல் அரசு மூடி மறைத்தது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை ராமாபுரத்தில் கோவில் திருவிழா நடந்துள்ளது. இதற்காக பாதுகாப்பு பணிக்கு ஆண் மற்றும் பெண் போலீசார் சென்றுள்ளனர். அப்போது திருவிழாவில் மது போதையில் திமுக நிர்வாகி கண்ணன் என்பவர் பெண் போலீசிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று திமுக கவுன்சிலர் ராஜி என்பவரும், முன்னாள் கவுன்சிலர் சண்முகம் என்பவரும் காவல் நிலையத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனால் பெண் போலீஸ் புகார் அளிக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் சம்பவ இடத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ. சீனிவாசன் என்பவர் அளித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், கண்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான இந்த ஆட்சி நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர். தமிழகத்தில் உள்ள பெண் போலீசாருக்கு திமுகவினரிடம் இருந்து முதலில் ஸ்டாலின் பாதுகாப்பு அளிக்க வேண்டும், எதுஎதற்கோ ஆர்ப்பாட்டம் செய்யும் கனிமொழி பெண் போலீஸ் பாதுகாப்புக்கு ஸ்டாலினிடம் பேச வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், இது நடக்குமா ?