தமிழக சட்டசபையில், ஜெயலலிதாவின் சேலையை திமுக எம்.எல்.ஏ.க்கள் பிடித்து இழுத்த சம்பவம் தற்போது கடும் விவாதப் பொருளாக மாறி உள்ளது. தவளை தன் வாயால் கெடுக்கும் என்பது போல, பெண்களின் ஆடைகளை பிடித்து இழுப்பதா, என்ன நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசினாலும் பேசினார்,
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை வெளுத்து வாங்கிவிட்டார். ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்த திமுகவுக்கு இது பற்றிப் பேச அருகதை இல்லை எனக் காட்டமாக பதில் அளித்தார். நிர்மலா சீதாராமனின் ஆவேச பேச்சால்
திமுக எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.
கடந்த 1989ல் சட்டசபையில் நடைபெற்ற சம்பவம் பற்றி அன்றைய நாட்களில் திருநாவுக்கரசர் அளித்த பேட்டி பல நாளிதழ்களில் வெளியாகி இருந்தன. அந்தப் பேட்டியில் எங்களை தாக்கி விட்டு நாங்கள் தாக்கியதாக கருணாநிதி கற்பனை செய்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். துச்சாதனர்கள், துரியோதனர்கள் விரைவில் அழிவார்கள். கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும், விரைவில் திமுகவினர் அழிந்து போவார்கள் என்றெல்லாம் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தற்போது, ஜெயலலிதாவின் சேலையை யாரும் இழுக்கவில்லை எனப் பொய் அறிக்கை வழங்கி வருகிறார். பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உட்பட, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், திருநாவுக்கரசரின் இந்த அந்தர் பல்டி அறிக்கை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்
திருநாவுக்கரசரின் பொய் பேச்சை யாரும் நம்பப்போவதில்லை. ஏன் என்றால் அவர் அதிமுகவில் இருந்தபோது அளித்த பேட்டி அனைத்து பத்திரிக்கையிலும் பதிவாகியுள்ளது. தற்போது அவர் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். அன்று நடந்த சம்பவம் உண்மைதான் என சொல்லிவிட்டால் காங்கிரசும் திமுகவும் கட்சி தன்னை ஓரம் கட்டிவிடும், என்ற பயம் என்ற பயம் வந்திருக்கலாம். எத்தனை முறை தான் கட்சித் தாவுவது என்று எண்ணி இருக்கலாம்! பாவம், இந்தப் பல கட்சி பச்சோந்திகள்!