மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிறந்தநாள்.. இராம ஸ்ரீநிவாசன் வாழ்த்து!

மதுரையின் புதல்வியே.. தமிழகத்தின் பெருமை.. 

ஜொலிக்கும் இந்தியாவின் ஆபரணம்.. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிறந்தநாளுக்கு, தமிழக பாஜக  மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டின் அக்கறையில் அதிக கவனம் செலுத்த கூடியவர் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள். அவர் வர்த்தக துறையில் அமைச்சராக இருந்த போது அனைத்து தொழில் தொடர்பான விவகாரம் குறித்து தீர்வு காண எளிதில் அவர்களைத்  தொடர்பு கொள்ள முடியும்.

மேலும் பிரச்னைகளை எளிதில் புரிந்து கொண்டு முனைப்புடன் அமைச்சர் தீர்த்து வைத்துள்ளார். குறிப்பாக பட்டாசுக்கு 25 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியை குறைக்க சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கையை  ஏற்று 18 சதவிகிதமாக குறைந்தவர் மத்திய நிதியமைச்சர்…

சிவகாசியில் பட்டாசு தொழில் முற்றிலும் முடங்கிவிடும் சூழல் ஏற்பட்ட போது என்னை  நேரடியாக பிரதமரின் முதன்மை செயலரிடம் அழைத்து சென்று அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிவகாசி பட்டாசு தொழிலார்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவினார்.

மேலும் சாத்தூர், கோவில்பட்டி தீ பெட்டி தொழிற்சாலைகளுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்க வழி செய்தவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள. நிதி அமைச்சராக பதவி ஏற்ற பின் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் சிறு குறு தொழில் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்தி அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர்.

இதே போன்று கொங்கு மண்டலத்தில் உள்ள தென்னை விவசாயிகளின் கொப்பரை தேங்காவுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்து அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்.

சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 5 நகரங்களை இணைக்கும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தட திட்டத்தை, தான்  பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கு  முக்கியப்  பங்காற்றியவர். உலக பொருளாதாரத்தை அச்சுறுத்திய கொரோனா தொற்று காலத்தில் இந்திய பொருளாதாரம் வீழ்ந்து விடாமல் காப்பாற்றியவர் மாண்புமிகு அமைச்சர்.

சிவகாசி மக்களின் கோரிக்கையை ஏற்று கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்வதற்கு உத்தரவு பிறப்பிக்க பேருதவி செய்தார் மத்திய நிதியமைச்சர்…

விருதுநகரின் மாவட்டத்தின் தீப்பெட்டி தொழிலை பாதுகாப்பதற்கு சீனாவின் சிகார் லைட்டுகள் இறக்குமதி வரியை அதிகரித்து, நான்கு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றியவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்…

மிக எளிமையான தோற்றம், கண்டிப்பான நேர்மை, காரரான நடைமுறை, உதவும் குணம், ஆழமான அறிவு, உலகத்தை பற்றிய புரிதல், கொள்கையில் பிடிப்பு, கட்சி தொண்டர்கள் யார் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை பார்த்தாலும், தங்கள் வீட்டின் மூத்த சகோதரியை போன்ற உணர்வு இவை அனைத்தும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் சிறப்பு … மதுரை மீனாட்சி அருளால் மதுரையின் புதல்வி.. தமிழகத்தின் பெருமை.. ஜொலிக்கும் இந்தியாவின் ஆபரணம்.. மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தனது  வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top