நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து உருவான கூட்டணி தற்போது தங்களது பெயரை இ.ண்.டி. என மாற்றிக் கொண்டுள்ளது. இவர்கள் பெங்களூரு, மும்பை, பாட்னா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் நடத்தின.
இதற்கிடையில் தமிழகத்தில் உதயநிதி சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும், அதனை பல்வேறு நோய்களுடன் ஒப்பிடும் பேசியிருந்தார். இவரது பேச்சு இந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக வடமாநிலங்களில் உதயநிதி பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதனால் இ.ண்.டி. கூட்டணியில் உள்ள மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்பை திமுகவுக்கு தெரிவித்தனர். ஆனாலும் வெளிப்படையான கண்டனத்தை தெரிவிக்கவில்லை. இருப்பினும் அங்குள்ள மக்கள் இ.ண்.டி. கூட்டணி மீது கடும் அதிருப்தி நீடித்தே வருகிறது.
இந்த நிலையில் தான் இ.ண்.டி. கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் அக்டோபர் 2-ம் தேதி நடத்தப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்துக்கள் எதிர்ப்பால் அதிர்ச்சியடைந்த அந்த கூட்டணி தற்போது, பொதுக்கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஒட்டுமொத்த இந்துக்களும் இ.ண்.டி. கூட்டணி மீது கடுமையான கோபத்தில் உள்ளனர் என்பதை இந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதை பார்த்தாலே தெரிகிறது. இப்போதே கூட்டணியில் விரிசல் விட துவங்கி உள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.