பொய் பேசும் சபாநாயகர் அப்பாவுக்கு ‘பா.ஜ.’ கண்டனம்!

பொய் பித்தலாட்டங்களை பேசி வரும் சபாநாயகர் அப்பாவுக்கு, பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: ‘‘200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கல்வி இருந்ததா? பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் இருந்ததா…? இருந்தது. ஆனால் அதில் படிக்க 4 சதவீதம் பேருக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டது. மீதமுள்ள 96 சதவீத ஹிந்துக்களுக்கு கல்வி அறிவை கொடுத்தது அருட்சகோதரர்கள், கிருஸ்துவ மத போதகர்கள். அவர்கள் பள்ளி, கல்லூரியை ஆரம்பித்து ஜாதி,மத வேறுபாடின்றி எல்லாருக்கும் கல்வி கற்றுக்கொடுத்தார்கள்’’ -தமிழக சபாநாயகர் அப்பாவு.

‘‘நம் வாலிபர்கள் பாட சாலைகளில் சுதேச மகான்களை பற்றி மிகவும் இழிவான எண்ணங் கொண்டு வளர்க்கிறார்கள். முக்கியமாக, கிருஸ்துவ பாடசாலைகளில் இவ்விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவேயில்லை. வியாசர், யாக்ஞவல்க்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான அவதார புருஷர்களையும், அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹா வீரர்களையும் பற்றி இவர்கள் கேள்விப்படுகிறதே இல்லை. கேள்விப்பட்டாலும், அவர்களெல்லாம் நவீன நாகரீகம் தெரியாத பைத்தியக்காரர்களென்ற விஷயத்தையே கேள்வியுறுகின்றார்கள். தந்தி, மோட்டார் வண்டி முதலிய விஷயங்களை பற்றி கேள்விப்பட்டிராததனால் கம்பன் தெய்வீகமான கவியென்பது பொய்யாய் விடுமா? ஒரு கிருஸ்துவ பாடசாலை உபாத்யாயருடன் பேசிக்கொண்டிருந்த போது, உனக்கு தெரிந்த விஷயங்கள் கூட வியாசனுக்கு தெரியாதே, உங்கள் முன்னோர்களெல்லாம் அநாகரீக ஜனங்கள் என்று கூறினார்.

இப்படிப்பட்ட உபாத்யாயர்களின் கீழ் நம் குழந்தைகள் இருக்குமானால் என்னவாகும்? நமது முதலாவது கடமை யாதென்றால், நம் பாடசாலைகளிலே பரத கண்டத்தின் புராதன மஹாத்மாக்களை பற்றி நல்ல பயிற்சி கொடுத்து, இளைஞர்களுக்கு தேச பக்தி, சௌரியம், ஒழுக்கம் முதலியன ஏற்படச் செய்ய வேண்டும். சிவாஜியைப்பற்றி சின்க்ளேர் எழுதியிருக்கும் குளறுபடிகளும், உபநிஷத்துகளைப்பற்றி பாதிரிகள் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களும் நம் இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டு விடுவோமானால் நமது நாட்டிற்கு நாமே பரம சத்துருக்களாக முடிவோம்’’ என்று 116 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதியார் கட்டுரை எழுதியுள்ளார் ..

நான்கு சதவீதம் நம் நாட்டில் இருப்பது கிருஸ்துவர்கள் தான் என்பது அப்பாவுக்கு தெரியுமா? 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் விண்ணை முட்டும் அளவிற்கு சர்ச்சுகள் இருந்தனவா? அப்பாவு அவர்களே, அந்த 4 சதவீதம் தான் நம் அறிவார்ந்த சமுதாயத்தை நாசமாக்கியது என்று பாரதியின் வாக்கு சொல்கிறதென்றால் ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் சொன்ன அந்த 4 சதவீத அருட்சகோதரர்கள், கிருஸ்துவ மத போதகர்கள் கல்வி என்ற பெயரில் பாரத கலாச்சாரத்தை சிதைத்து, தங்களின்  மதத்தை திணித்தார்கள் என்பதையும், மதமாற்றத்திற்கு வழி வகுத்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்களா அப்பாவு அவர்களே? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top