புனிதமான திருவள்ளூவர் மண்ணில் தாமரை வெற்றிபெறும் என்று பா.ஜ., தமிழக முன்னாள் மேலிடப் பார்வையாளர் சி.டி.ரவி தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் பா.ஜ.வின் வளர்ச்சி நாளுக்கு நாள், பெருகி வருகிறது. மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் என் மண், என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் கூடி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் போது இளைஞர்கள், பெண்கள் என பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து யாத்திரையில் பங்கேற்று வருகின்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள் பா.ஜ.,வின் மீது வேண்டும் என்றே விமர்சனம் வைப்பதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், தமிழக முன்னாள் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “புனிதமான திருவள்ளுவர் மண்ணில் தாமரை பெரும் வெற்றி பெறும். மேலும், தமிழகத்தில் பா.ஜ.க. பெரிய அளவில் வளர்ச்சி பெரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.