வேலூர் பேருந்து நிலையம் அருகே திமுகவை சேர்ந்த இரண்டு கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் சராமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த பின்னர் சட்டம், ஒழுங்கை அந்த கட்சியினரே முதலில் மதிப்பதில்லை. திமுகவினர் பங்கேற்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருவதை பார்க்க முடிகிறது.
அதன்படி வேலூர் மாநகராட்சி கவுன்சிலர்களான சுதாகர், முருகன் ஆகியோர் பேருந்து நிலையம் அருகே மோதல் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் மாறி தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த கவுன்சிலர் சுதாகர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதில் யாரையும் கைது செய்யவில்லை. இதற்குத் தான் காவல்துறையை ஏவல் துறை என்கின்றனர் இதர கட்சியினர்.