காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வாங்கித் தராத திமுக அரசையும், கர்நாடக காங்கிரஸ் அரசையும் கண்டித்து இன்று (அக்டோபர் 11) டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும் விவசாயிகள், வணிகர்கள் சார்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 11) கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் விவசாய சங்கத்தினர், வணிகர்கள், பொதுமக்கள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த கடையடைப்பு போராட்டத்தால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டுள்ளன. காலை 6 மணிக்கு தொடங்கிய கடையடைப்பு போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இதேபோல் கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற உள்ளது. கடையடைப்பு போராட்டத்தால் டெல்டா மாவட்டங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின், தண்ணீர் திறந்து விடாத கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து ஒரு அறிக்கை கூட விடவில்லை. மாறாக வேண்டும் என்றே மத்திய அரசு தண்ணீர் பெற்றுத் தரவில்லை என்பது போன்ற பொய்யான செய்தியை மக்களிடம் முன்வைத்து வருகிறார். இது பற்றி மக்களிடம் நாடகம் ஆடினால் போதும் என்ற மனநிலைதான் அக்கட்சி நிர்வாகிகளிடம் இருக்கிறது.
பல லட்சம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை தண்ணீர் இன்றி கருகி வருகிறது. இது பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் வருகிறது. அதனை பார்த்தாவது தண்ணீர் பெற்றுத்தர வேண்டும் என முன் வருவதற்கு கூட ஸ்டாலின் தயாராக இல்லை. விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்யும் கட்சிகளாகவே திமுகவும், காங்கிரஸ் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.