கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுவிக்கும் தவறான முன்னெடுப்பை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்வார் என நம்புவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 1998 பிப்ரவரியில் அமைதியான கோவை மாநகரத்தில் அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாதிகள் வைத்த குண்டுகள் வெடித்ததில் 58 உயிர்களை பலியானதுடன், 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
குண்டுவெடிப்பு ஏற்படுத்திய காயத்தின் வலி இன்னும் ஆறாத நிலையில், 2022 அக்டோபரில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் சம்பவம் கோவையை உலுக்கி இருக்கிறது. இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 13 பேரை, தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
ஆனால், இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் பயங்கரவாதிகளை விடுதலை செய்வது குறித்து, சட்டசபையில் விவாதிக்கப்பட்டு உள்ளது. வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை விட, சிறுபான்மையினரை திருப்தி செய்வதுதான் ஒரு சிலருக்கு முக்கியமாகி விட்டது போலும். கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளை, சிறையில் இருந்து விடுவிக்கும் இந்த தவறான முன்னெடுப்பை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்வார் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.