இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளிடையே நடந்து வரும் போரில் பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளதை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் வெடிகுண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 700க்கும் அதிகமான அப்பாவி மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதே சமயம் இந்தியா சார்பில் ஹமாஸ் பயங்கரவாத செயலுக்கு பிரதமர் மோடி கண்டனத்தைத் தெரிவித்தார். இந்த நேரத்தில் இஸ்ரேல் பக்கம் இந்தியா நிற்பதாகவும் கூறியிருந்தார்.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகத் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. அப்பாவி மக்களை கொன்றுக் குவிக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றுவதா என இந்திய மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்தச் செயல்பாட்டை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தனது முகத்தை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு எனத் தெரிந்தும், தனது வெளிப்படையான ஆதரவை அதற்கு அளித்துள்ளது.
இ.ண்.டி. கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது. அப்படி இருக்கையில் இந்தக் கூட்டணி எப்படி நாட்டை பாதுகாக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.