இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக சென்னை, பனையூரில் மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் வாசலில் இருந்த பாஜக கொடிக்கம்பத்தை இரவில் அகற்றுவதா என மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நேற்று இரவு 10 மணி தொடங்கி அதிகாலை 3 மணி வரை சென்னை பனையூர் மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் வாசலில் இருந்த பாஜக கொடிக்கம்பத்தை அகற்றுவதில் தமிழ்நாடு காவல்துறை மும்முரமாக செயல்பட்டு வெற்றி கண்டு இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை இங்கு பராமரித்தது போல் தமிழ்நாட்டில் குற்று உயிரும் குலை உயிருமாய் கிடக்கும் மற்ற பகுதிகளில் பராமரித்திருந்தால் பாராட்டு சொல்லி இருக்கலாம்.
மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டு முன் இருந்த பாஜக கொடி கம்பம் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை. அதே பகுதியில் அதற்குப் பக்கத்தில், பாஜக கொடிக்கம்பத்திற்கு சமமாக இருக்கின்ற திமுக கொடி கம்பத்தை அகற்றாதது ஏன்?
எல்லோருக்கும் தெரிந்த நியாயம் தான் இது… பாஜக வெறுப்பு..
100 இஸ்லாமிய சகோதரர்கள் அண்ணாமலை வீட்டுக்கு எதிர் புறம் குவிந்து திடீரென இந்த கம்பத்தை அகற்ற போராடியது ஏன்? அவர்களை கைது செய்யாமல் வழக்கு தொடராமல் அன்போடு அரவணைத்து அருகில் இருந்த மசூதிக்குள் அனுப்பி விட்டு பாஜக தொண்டர்கள் மீது லத்தி சார்ஜ் செய்து வன்முறையை கட்டவிழ்த்து விட்ட போலீசின் அராஜகம் கண்டிக்கத்தக்கது.
110 பாஜகவினரை காயப்படுத்தி தலை கண்களை அடித்து நொறுக்கி மண்டபத்துக்கு உள்ளே அடைத்து வைத்திருப்பது ஏன்?
கைது செய்ய அவர்கள் இப்போது காத்திருப்பில் வைக்கப்பட்டிருப்பது ஏன்?
ஒன்றே ஒன்றுதான்..
ஓட்டுக்காக இஸ்லாமியர்கள் தாஜா…
நாட்டுக்காக பாடுபடும் பாஜகவின் மீது தாக்குதல்.. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு அந்திம காலம் வந்து விட்டதற்கான அறிகுறி இது.. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.