சென்னை அடுத்த பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை இஸ்லாமிய கும்பலின் தூண்டுதலின் பேரில் திமுக அரசு அகற்றியது. இந்த சம்பவத்திற்கு மாநில பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் டாக்டர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை, பனையூரில் உள்ள தமிழ்நாடு மாநில தலைவர் திரு அண்ணாமலை இல்லம் அருகே வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்றி பா.ஜ.க.வினரை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த கைது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது, தேவையற்றது ஆகும். தமிழக பாஜகவினர் மீது திட்டமிட்டு பழி வாங்கும் அரசியலாகும். ஜனநாயக உரிமைகளை முடக்குவது அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி திமுகவை அதிர வைத்துள்ளது.
குறிப்பாக அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையால் கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
திமுக அரசின் இந்த ஜனநாயக விரோதச் செயலுக்கு தமிழக மக்கள் உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள். பாஜக நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திமுக அரசின் இதுபோன்ற செயல்களுக்கு பாஜகவினர் பயப்பட மாட்டார்கள். தமிழக பாஜக நீதிக்காக போராடும், மேலும் ஆளும் திமுக அரசின் பல்வேறு ஜனநாயக விரோத கொள்கைகள் மற்றும் தவறான ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.