சென்னை, திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்திற்கும் உட்பட்ட எல்லைப்பகுதியில் கடந்த அக்டோபர் 15ம் தேதி திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் திருத்தணி நகர நிர்வாகிகள் கல்வெட்டு ஏற்படுத்தினர். அதன்படி இன்று (அக்டோபர் 23) பாஜக மாநில துணை தலைவர் எம்.சக்ரவர்த்தி கல்வெட்டு திறந்து கட்சி கொடியை ஏற்றி வைக்க இருந்தார்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 19ம் தேதி இரவு திருத்தணி வருவாய் துறையினர் அனுமதியின்றி அரசு நிலத்தில் கட்டியதாக கூறி கல்வெட்டை இடித்து அகற்றினர். இது பற்றி தகவல் அறிந்த திருத்தணி நகர தலைவர் சூரி, திருத்தணி ஒன்றிய தலைவர் வீரபிரம்மா ஆச்சாரி மற்றும் நிர்வாகிகள் கல்வெட்டு இடித்து அகற்றப்பட்ட இடத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தனர்.
மேலும், கடந்த அக்டோபர் 20ம் தேதி பாஜக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டதால், திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதன் பின்னர் பாஜக நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.
சமீபகாலமாக பாஜகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் கொடிக்கம்பம், கல்வெட்டு உள்ளிட்டவைகளை விடியாத திமுக அரசு அகற்றி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை சென்னை பனையூரில் மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு அகற்றியது. இதன் பின்னர் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் கொடிக்கம்பங்கள் நடப்படும் என மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கொடிக்கம்பங்கள் தயார் செய்யும் பணியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் திமுக எதிர்பார்த்திராத வகையில் பல இடங்களில் கொடிக்கம்பங்கள் நிறுவப்படும் என தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.