திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா பத்திரிகை திமுகவினரின் விளம்பரத்திற்காக அடிக்கப்பட்டுள்ளதாக கூறி பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா நவம்பர் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் 26 மாலை 6:00 மணிக்கு 2,668 மலை உயர அண்ணாமலையார் உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும்.
இதனையொட்டி பக்தர்களுக்கு விநியோகிக்க ஆண்டுதோறும் நன்கொடையாளர்களால் 10,000 பத்திரிகை அச்சடித்து வினியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த பத்திரிகையை வாங்குபவர்கள் பூஜை அறையில் வைத்து பாதுகாப்பது வழக்கம்.
இந்த நிலையில், இந்த ஆண்டு பத்திரிகையில் ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர்கள், வேலு, சேகர்பாபு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலையில்’ என புதியதாக வாசகம் சேர்க்கப்பட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் விளம்பரத்திற்காக அச்சடித்த பத்திரிகையை பூஜை அறையில் வைக்க முடியாததால் பக்தர்கள் மற்றும் ஆன்மிகவாதிகளிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்டதையும் தெரிவிக்கின்ற வகையில் கருத்துகளை பக்தர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் பக்தர்களுக்கு பத்திரிகை வினியோகம் செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சனாதனத்தை அழிப்போம் என்று சொல்லும் திமுகவவினர் எதற்காக கோவில் பத்திரிகையில் தங்கள் பெயர் போட்டு அச்சடிக்க வேண்டும்? திமுகவினர் மலிவான விளம்பரத்திற்கு இந்து கோவில்தான் கிடைக்கிறதா? சேகர்பாபு மூலமாக பல கோவில் சொத்துகள் பல்வேறு வகைகளில் கொள்ளையடிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது திருவண்ணாமலை அண்ணாமலை கோவிலில் மூக்கை நுழைத்துள்ளனர் சனாதன எதிர்ப்பு கோஷ்டியினர்… உடனடியாக இந்துக்கள் விழிப்புடன் செயல்பட்டு திமுகவினரை விரட்டி அடிக்க வேண்டும். இல்லை என்றால் திருவண்ணாமலை கோவிலையே திமுகவினர் விழுங்கி விடுவார்கள் என்று பக்தர்கள் கொந்தளிக்கிறார்கள்.