இரண்டாவது நாளாக எ.வ.வேலுவுக்கு இந்தியாவை காண்பித்த ஐ.டி. அதிகாரிகள்!

திமுக அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் நேற்று அதிகாலை துவங்கிய வருமான வரித்துறை சோதனை, 2-வது நாளாக இன்றும் (நவம்பர் 4) நடைபெற்று வருகிறது.

எ.வே.வேலுவின் சென்னை, திருவண்ணாமலையில் உள்ள பங்களா, அலுவலகம், அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி காட்டி வருகிறார்கள்…

குறிப்பாக வேலுவின் மகன் கம்பன் குடியிருக்கும் திருவண்ணாமலை அடுத்துள்ள கீழ்நாச்சிப்பட்டி பங்களாவிலும் அருணை பொறியியல் கல்லூரியிலும் தீவிர சோதனை நடைபெறுகிறது.

மேலும்,  கரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு, அமைச்சரின் உதவியாளரான சுரேஷின் ஃபைனான்ஸ் நிறுவனம், வீடு உள்ளிட்ட 20 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. இவர்கள்  அமைச்சரின்  பினாமிகளா உலா வருபவர்கள்…

அதேபோல கோவை திமுக நிர்வாகியும், வேலுவின் பினாமியுமான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் சோதனை தொடர்கிறது.

கரூரில் ஏற்கனவே 10 ரூபாய் டாஸ்மாக்கில் கொள்ளையடித்த அமைச்சர் பாலாஜி வீட்டிற்கு சோதனை சென்றபோது, திமுகவினர் அதிகாரிகளை தாக்கியதால், தற்போது துணை ராணுவப்படை பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 25 கோடி ரூபாய் வரை கைப்பற்றி உள்ளதாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சோதனை இன்னும் எத்தனை நாட்களுக்கு விரிவடையும் என்று தெரியவில்லை. இதில் பல கோடி ரூபாய் ஊழல் பணம் மற்றும் சொத்து விவரங்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்தியா என்றால் எங்கு உள்ளது என கேட்ட எ.வ.வேலுவுக்கு தற்போது இந்தியா எங்கு உள்ளது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் காண்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர் பத்து ரூபாய் பாலாஜியுடன் புழல் சிறையில் கம்பி எண்ணப்படுவது  உறுதி என்கிறார்கள் உள்கட்சி எதிர்ப்பாளர்கள் ..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top