சமூக ஊடகங்களில் திமுகவினரை, பாஜக ஐடிவிங் தும்சம் செய்து வருகின்றனர். அதாவது வேங்கைவயலில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்து கிட்டத்தட்ட 300 நாட்களை கடந்தும் விடியாத அரசின் முதல்வர் ஸ்டாலின் இன்றுவரை அங்கு செல்லவில்லை. அதனை உபிகளுக்கு நியாபகப்படுத்தும் விதமாக பாஜக ஐடிவிங் தரமான சம்பவம் ஒன்று செய்தது.
அதாவது பாஜக ஐ.டி. விங், ஸ்டாலினுக்கு வேங்கைவயல் செல்ல ‘ பேருந்து டிக்கெட் ‘ எடுத்து அதை பகிர்ந்துள்ளது! வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நடந்து 300 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை சுட்டிக் காட்டும் வகையில் இந்த பஸ் டிக்கெட்டை தயாரித்துள்ளனர்.
சமூக நீதி டிராவல்ஸ் கம்பெனியின் ‘ரெட் ஜெயன்ட் பஸ்’ஸில் சென்னை செனடாப் ரோடிலிருந்து நேராக வேங்கைவயல் வாட்டர் டேங்குக்கே டிக்கெட் ‘புக்’ செய்துவிட்டனர். பயணியின் பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று போட்டு, சீட் நம்பராக ‘2ஜி’ என குசும்பு காட்டியுள்ளனர். அத்துடன் ‘டிக்கெட் கட்டணத்தை தமிழக பாஜக முழுமையாக செலுத்திவிட்டது. உங்க ஓனரை போய்ட்டுவரச் சொல்லுங்க’ என்று திமுக பாணியிலேயே கோரிக்கையும் விடப்பட்டிருந்தது.
சமூக ஊடகங்களில் பதிவிடும் உபிகளுக்கு 200 ரூபாய் சன்மானம் வழங்கப்படுகிறது. அதை கிண்டல் செய்யும் வகையில் சென்னையில் இருந்து வேங்கைவயலுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.200 என்று குறிப்பிட்டிருந்ததுதான் நகைச்சுவையின் உச்சம்!