தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியாவில் 30 ஆயிரம் கோடிக்கு தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகை வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்து பண்டிகை மற்றும் நல்ல தினங்களில் தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை பலரும் விரும்பி வாங்குவது வழக்கம். அதிலும் தல தீபாவளி பண்டிகைக்கு புதுமன தம்பதிகளுக்கு மோதிரம், செயின் உள்ளிட்டவை அணிவது ஜோராக இருக்கும்.
அது போல் ஒரு சிலர் தீபாவளிக்கு பரிசாக பெண்களுக்கும் தங்கம் வாங்கிக் கொடுப்பர். இதன் காரணமாக தீபாவளிக்கும் ஆடி மாதம் கழித்தும் புத்தாண்டு உள்ளிட்ட நல்ல நாட்களில் தங்கம் விற்பனை கூடுதலாகவே இருக்கும். அது போல் வெள்ளி விற்பனையும் அதிகமாகவே இருக்கும்.
அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம், வெள்ளி, வாகன விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது இந்தியா முழுவதும் தங்கமும் வெள்ளியும் 30 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகை வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது 41 டன் தங்கமும், 400 டன் வெள்ளியும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.