மனித வளர்ச்சிக் குறியீட்டின் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியின் அவலங்களில் இதுவும் ஒன்று என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
‘என் மண் என் மக்கள்’ நான்காம் கட்ட யாத்திரையின் ஒரு பகுதி நேற்று (நவம்பர் 16) பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் எழுச்சியுடன் பிரமாண்டமாக நடந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கினார். அவர்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்று அதற்கான தீர்வுகளையும் வழங்கி வருகின்றார்.
அதன்படி யாத்திரை பயணம் தொடர்பாக அண்ணாமலை தனது சமூக வலைத்தளங்களில் கூறியிருப்பதாவது:
இன்றைய (நவம்பர் 16) என் மண் என் மக்கள் பயணத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவதாண்டேஸ்வர் கோவில் அமைந்திருக்கும் மிகவும் அருமையான குன்னம் தொகுதியில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீது கொண்ட அன்பினை, பெரும் திரளெனக் கூடி பொதுமக்கள் வெளிப்படுத்தினர்.
மனித வளர்ச்சிக் குறியீட்டின் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியின் அவலங்களில் இதுவும் ஒன்று. ஆனால், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் குறுநில மன்னராக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
போக்குவரத்துத் துறையில் மட்டும் 2,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது என்று டிஎம்கே பைல்ஸ் 2 -ல் குற்றச்சாட்டு வைத்தோம். திமுக முதல் குடும்பத்துக்குக் கப்பம் கட்டிவிட்டு, தனது வசூல் வேட்டையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் அமைச்சர்.
சமூக நீதி என்று வேடமிட்டுத் திரியும் திமுகவில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குன்னம் தொகுதி செந்துறை பாஜக தெற்கு ஒன்றியச் செயலாளர், சகோதரர் அன்பரசன், தனது வீட்டில் நடைபெற்ற விழாவில் பட்டாசு வெடித்ததாகக் கூறி, வாளரக்குறிச்சி திமுக கிளைச் செயலாளர் கண்ணன் என்பவரும் அவருடன் இருந்தவர்களும், காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்தியுள்ளனர்.
மேலும், தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. பட்டியல் சமுதாய மக்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட 10,000 கோடி ரூபாய் நிதியை செலவிடாமல் திருப்பி அனுப்பினர். சேலத்தில் ஒரு பட்டியல் சகோதரரை கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டினர். கள்ளக்குறிச்சியில் பட்டியல் சமுதாய மக்களை கொடி ஏற்ற விடாமல் தடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்தில், கலந்து கொள்ள வந்த பெரம்பலூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மீதும், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீதும், செய்தியாளர்கள் மீதும், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் உள்ளிட்ட திமுகவினர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். மணல் கடத்தலைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலர், அவரது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்படும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. தற்போது, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே, அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்கு, திமுகவினர் கொண்டு வந்துள்ளனர்.
தமிழக மின்சார வாரியத்தின் அனல் மின் நிலக்கரி திட்டத்திற்கு ஜெயங்கொண்டம் பகுதியில் 25 வருடங்களுக்கு முன்பு கையகப்படுத்திய 8,373 ஏக்கர் நிலத்தில், ஒரு செங்கலை கூட வைக்காமல், கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் அரசு திரும்ப ஒப்படைத்துள்ளது. இதே போல, 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராமப் பகுதிகளில், விவசாயிகளுக்கு சொந்தமான 3000 ஏக்கர் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்பட்டது. இன்று வரை இந்த பொருளாதார சிறப்பு மண்டலத்தில் ஒரு செங்கலை கூட வைக்கவில்லை. கொடுத்த விவசாய நிலம் இப்போது தரிசு நிலம் ஆகிவிட்டது. வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி விட்டு, பத்து வருடத்திற்குப் பிறகு, விவசாயிகளுக்கு நிலத்தை தரிசாகத் திருப்பி கொடுப்பார்கள்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, பெரம்பலூர் மாவட்டத்தில், 16,772 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 87,516 வீடுகளில் குழாயில் குடிநீர், 83,439 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 39,531 பேருக்கு ரூபாய் 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 71,117 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 75,208 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 873 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
ஆனால் திமுக, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான செந்துறையை ஊராட்சியில் இருந்து பேரூராட்சியாக நிலை உயர்த்தல், குன்னத்தில் மருத்துவக் கல்லூரி, குன்னம் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தல் உள்ளிட்ட எந்த ஒரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மூன்று வருடங்களாக மக்களை வஞ்சித்து வருகிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம்.
பெரம்பலூர் மாவட்டம்:
நேற்றைய மாலை (நவம்பர் 16) என் மண் என் மக்கள் பயணம், கற்காலத்தில் இருந்து தனிச்சிறப்பு பெற்ற புண்ணிய பூமியான பெரம்பலூர் மண்ணில், பொதுமக்கள் பெரும் திரளெனக் கூடி ஆரவாரத்துடன் நடந்தேறியது.
கடந்த 70 ஆண்டு கால திராவிட ஆட்சியில், பெரம்பலூர் முன்னேற்றமடையவில்லை. தமிழகத்தில் வளர்ச்சி என்பது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை என நான்கு மாவட்டங்களின் உற்பத்தித் திறன் 32%. வளர்ச்சியே தவிர ஒட்டுமொத்த வளர்ச்சி இல்லை. சென்னையும் கோவையும் ஆங்கிலேயர் காலத்திலேயே வளர்ச்சியடைந்த பகுதிகள். பெரம்பலூர் உற்பத்தித் திறன் வெறும் 0.6%, அரியலூரின் உற்பத்தித் திறன் 0.3%. ஒரு சதவீத உற்பத்தித் திறன் கூட இல்லாமல் இந்தப் பகுதிகளை வைத்திருப்பதே 70 ஆண்டு கால திராவிட மாடல் அரசாங்கம்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்காமல், பாசன வசதியை மேம்படுத்தாமல், விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்காமல் பெரம்பலூரையும் அரியலூரையும் தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களாக வைத்திருக்கிறார்கள். பின் தங்கிய மாநிலமாக திமுகவினர் கூறும் பீகார் மாநிலத்தின் 38 மாவட்டங்களில், 35 மாவட்டங்களை விட, பெரம்பலூர் மாவட்டம், மனித வளர்ச்சி குறியீட்டில் பின் தங்கியிருக்கிறது.
70 ஆண்டுகாலமாக, திராவிட இயக்கங்கள் பொய்களைச் சொல்லி, பொதுமக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். 70 ஆண்டு கால தமிழகத்தில் நடக்கும் அரசியலை தூக்கி எறிய வேண்டும் தமிழகத்துக்கு புதிய அரசியல் தேவைப்படுகிறது. பொதுமக்களை இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த அரசியல் கட்சிகளை, நாம் ஒதுக்கி வைக்க வேண்டும். பெரம்பலூரும் அரியலூரும் முன்னேறவும், உற்பத்தித் திறனில் மேம்படவும், தமிழக பாஜக பொதுமக்களோடு இணைந்து உழைக்கும்.
திமுகவின் ஊழல்களை, தமிழக பாஜக தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஊழல்வாதிகள் மீது தொடர்ந்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. திமுக அமைச்சர்கள், திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஊழல் வழக்கு விசாரணைகளைச் சந்தித்து வருகின்றனர். ஊழல்வாதிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மீதும், ஒரே ஆண்டில் 2,000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறோம். திமுக அமைச்சர்களில் 11 பேர் மீது ஏற்கனவே ஊழல் வழக்கு இருக்கிறது. தமிழக பாஜக, 5 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்திருக்கிறோம். கடந்த 30 மாதங்களில், திமுகவின் சாதனை, ஊழல் மட்டுமே. அமைச்சர் சிவசங்கரும் விரைவில் ஊழல் வழக்கில் நடவடிக்கைக்கு உள்ளாவார்.
ஊழல்வாதிகளை விட்டுவிட்டு, விவசாய நிலங்களைக் காப்பாற்றப் போராடும் விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போட்டிருக்கிறது திமுக அரசு. திமுக முதல் குடும்பம் சம்பாதிக்க, தமிழக விவசாயிகள் நலனை அடகு வைக்கிறார்கள். ஜெயங்கொண்டத்திலும், குன்னம் தொகுதியிலும் நிலத்தைக் கையகப்படுத்தி, பல ஆண்டுகள் பயன்படுத்தாமல், நிலத்தைத் தரிசாக்கிவிட்டு, பின்னர் திருப்பிக் கொடுக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது விவசாயப் பெருமக்களே. அமெரிக்காவில் வெளிவரும் டைம்ஸ் பத்திரிக்கையில், உலக அளவில் அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்களில் முதல் பத்து நபர்களில் ஒருவராக வந்த 2ஜி ராஜாவின் பினாமி சொத்துக்களை, தற்போது ஒவ்வொன்றாக அமலாக்கத் துறை முடக்கி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தை பலியாக்கி, திமுகவினர் மட்டும் முன்னேறி வருகிறார்கள்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில், பொருளாதாரத்தில், 11 ஆவது இடத்திலிருந்து, 5ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறோம். போக்குவரத்து வசதி, உட்கட்டமைப்பு, வீடு வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, முத்ரா கடனுதவி என ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்துக்கு மட்டும் பத்து லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி அளவுக்கு நலத் திட்டங்கள் வழங்கியுள்ளார்.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுமக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், பிரதமர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டிருக்கிறார். 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் கூறுகிறார் ஸ்டாலின். பெரம்பலூரில் மட்டுமே, பாதாள சாக்கடைத் திட்டம், பொறியியல் கல்லூரி, குளிர்பதனக் கிடங்கு, பல் நோக்கு மருத்துவமனை, பேருந்து நிலையம் என ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. சட்டசபையில் உதயநிதி புகழ் பாட மட்டுமே பெரம்பலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இருக்கிறாரே தவிர, பெரம்பலூர் மக்களுக்கான பணிகளை மேற்கொள்ள அல்ல.
ஏழை மக்களை பரம ஏழைகளாக்கும் கட்சிகள் வேண்டாம். ஊழல் செய்வதற்காகவே ஆட்சியில் இருக்கும் கட்சிகள் வேண்டாம். தங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நடத்தும் ஆட்சி வேண்டாம். வரும் பாராளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும். நம் தலைமுறை கஷ்டப்பட்டு விட்டோம். நம் குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது. எனவே வரும் தேர்தலில், தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்துவோம். இவ்வாறு அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.