11-வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு!

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. டிசம்பர் 4ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

வேலை வாங்கித்தருவதாக கோடிக்கணக்கான பணம் வாங்கியதற்காக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அவரிடம் பல்வேறு விசாரணைகளை வாக்கு மூலமாக பெற்ற பின்னர் ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன் பிறகு நீதிமன்றக் காவல் கடந்த அக்டோபர் 20ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தினர். இதைத் தொடர்ந்து அவரது நீதிமன்ற காவலை நவம்பர் 22ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது அங்குதான் உள்ளார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலமாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை டிசம்பர் 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பது இது 11-வது முறையாகும். இதனிடையே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அமலாக்கதுறை கொண்டு சென்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை அமலாக்கதுறை வசம் உள்ளதாகவும் அந்த ஆவணங்களை தங்களிடம் வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் கடந்த விசாரணையின் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவிற்கு அமலாக்க துறை இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் இந்த வழக்கிற்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு குற்றம் சாட்டபட்ட செந்தில் பாலாஜிக்கு வழங்கபட்டுள்ளது என தெரிவிக்கபட்டது. இதனையடுத்து ஆவணங்களை கோரிய மனு மீதான விசாரணை டிசம்பர் 4 தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

ஏற்கனவே ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான தண்டனையை பெறுவார் என்பது நியதி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top