திமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன் கட்சியில் இருந்து தற்காலிக செய்யப்பட்ட பின், அவர் அமைச்சர் துரைமுருகன் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் சேர்ந்து மணல் கொள்ளையில் சுமார் 60 ஆயிரம் கோடி அளவுக்கு கொள்ளையடித்துள்ளனர் என பரபரப்பாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
பெண்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்த குடியாத்தம் குமரன் என்பவரை கட்சியில் இருந்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளருமான துரைமுருகன் நீக்கி உத்தரவிட்டார்.
குடியாத்தம் குமரன் ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டிலும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்பட்டார். துரைமுருகனையும், அவரது மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்த்தையும் விமர்சித்து குடியாத்தம் குமரன் பேசிய ஆடியோ ஒன்று வெளியானதால், அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. பின்னர் துரைமுருகனிடம் மன்னிப்புக் கேட்டதால் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நடிகை விந்தியா குறித்து மீண்டும் குடியாத்தம் குமரன் இழிவாக பேசியிருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்ட பின்னர் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்பாக எம்.பி. கதிர் ஆனந்த் என் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிறார். துரைமுருகனும் கட்சியிலிருந்து என்னை நீக்கப் பார்க்கிறார். என் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் குமரன். இதையடுத்தே குமரன் மீது மீண்டும் தற்காலிக நீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பற்றியும் அவரது மகனும் திமுக எம்.பியுமான கதிர் ஆனந்த் பற்றியும் அடுக்கடுக்காக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார் குடியாத்தம் குமரன்.
எனக்கும் அமைச்சர் துரைமுருகனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. கதிர் ஆனந்த் தான் இந்த மாவட்டத்துக்கே பிரச்சனை. சேர்மன் தேர்தலில் திமுகவை எதிர்த்து நின்ற பாமகவுக்கு, ஒரு பெரிய தொகைக்கான டெண்டரை வழங்கினார் கதிர் ஆனந்த். திமுககாரனுக்கு எதிராகவே கதிர் ஆனந்த் செயல்பட்டு வருகிறார். துரைமுருகன் குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.
மணல் மூலம் துரைமுருகன் ரூ.60 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார். அது பற்றிய உண்மைகளை வெளியிடுவேன். துரைமுருகன், கதிர் ஆனந்த் இருவரும் ஏலகிரி மலை பங்களாவில் பேசிய முக்கியமான ஆடியோ பதிவுகளை வைத்திருக்கிறேன். மணல் விவகாரங்களில் நடந்த ஊழல் சம்பந்தமான ஆவணங்களும் கிடைத்திருக்கின்றன. அவற்றையெல்லாம் விரைவில் வெளியிடுவேன். நான் அவற்றை வெளியிட்டால் அடுத்த 10 நிமிடத்தில் துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி இருக்காது என்று பரபர குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் குமரன். இந்த வீடியோ தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே அமைச்சர் பி.டி.ஆர். 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்ற ஆடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது துரைமுருகன் 60 ஆயிரம் கோடி மணல் மூலம் கொள்ளையடித்திருக்கிறார் என்ற வீடியோ மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் மணல் கொள்ளை பற்றி அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. நீர்வளத்துறை முதன்மை பொறியாளரிடம் மற்றும் மணல் கொள்ளை நடந்த பகுதியை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களையும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வரும் நிலையில் 60 ஆயிரம் கோடி கொள்கை மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.தமிழக வளத்தை
எப்படி எல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ அதனை எல்லாம் இந்த விடியாத திமுக அரசு செய்து வருகிறது.
இன்னும் மூன்று ஆண்டுகள் இந்த அரசு இருந்தால் என்னென்ன கொள்ளை போகுமோ என்று மக்கள் கதி கலங்கி நிற்கின்றனர்