தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்களில் உள்ள சாலைகள் மற்றும் வீடுகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்று அதிகாலை முதல் பெய்த மழையால் பல்வேறு சாலைகள் வெள்ளநீரால் சூழ்ந்துள்ளது. பல வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்துள்ளது.
இந்த நிலையில், மழைநீர் தேங்கியது குறித்து திமுக அமைச்சர் கீதா ஜீவனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலை கேட்டு பலரும் ஆடிப்போய் உள்ளனர் என்றே சொல்லலாம்.
அதாவது மழைநீர் சாலை மற்றும் வீடுகளில் தேங்குவதற்கு காரணம், பூமியில் இருந்து வரும் நீரூற்றுதான் என்றார். இதனை சற்றும் எதிர்பாராத நெட்டிசன்கள் கீதா ஜீவனை வறுத்தெடுத்து வருகின்றனர். ஏற்கனவே முட்டை மீது பூசப்பட்ட மையினால்தான் முட்டை அழுகியதற்குக் காரணம் என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார். இப்போது மழை நீர் பற்றி கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார். திமுக அமைச்சர்கள் இன்னும் என்னென்ன அதிர்ச்சி தரப் போகிறார்களோ என்று மக்கள் ஆடிப் போய் உள்ளனர்!