பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை!

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பது பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இது இரு மதத்தினர் மத்தியில் மோதலைத் தூண்டுவகையில் இருப்பதாக கூறி சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை பியூஸ் மானுஷ் என்பவர் தொடர்ந்தார். இதனை விசாரித்த சேலம் நீதிமன்றம் தலைவர் அண்ணாமலையை நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு தடைக் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்பாக யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியால் பொது அமைதிக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனக்கு எதிராக கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த எந்த குற்றச்சாட்டு வைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் அண்ணாமலைக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்களித்தார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top