சதுரங்க வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார். இவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சதுரங்க வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார். இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் 2500 புள்ளிகளை வைஷாலி கடந்தார். இவர் இதன்மூலம் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெரும் 3வது பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இந்த நிலையில், மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்;
இந்தியாவின் 84 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள தமிழக செஸ் வீராங்கனை சகோதரி வைஷாலி அவர்களுக்கு, தமிழக பா.ஜ.க., சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய அளவில் மூன்றாவதாகவும், தமிழக அளவில் முதல் பெண் கிராண்ட் மாஸ்டராகவும் சாதனை படைத்துள்ள சகோதரி வைஷாலி அவர்கள், உலக அரங்கில் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள். இவ்வாறு அண்ணாமலை தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.