பா.ஜ.க., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது: நீண்ட ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கைக்காக தமிழக பாஜக சார்பில் ஜே.பி.நட்டா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஒவ்வொரு காரியகர்த்தாவிற்கும் ஒரு உத்வேகம். பல்வேறு சமயங்களில் அவரது வழிகாட்டுதல் மற்றும் நுண்ணறிவு எங்களைப் போன்ற இளம் காரியகர்த்தாக்களுக்கு விலைமதிப்பற்றது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.