2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாயில் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும், தற்போது சென்னை மழை நீரில் மிதக்கிறது. 2015ம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்த நிலையில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2015ம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் சென்னை மாநகராட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழரசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தங்கள் பகுதியில் உள்ள மாமனக்கா ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். நீர் வழிப்பாதைகளில் எந்த தடையும் இருக்க கூடாது. வெள்ளம் வடிய அனுமதிக்கப்பட வேண்டும்.
தண்ணீர் இல்லாமல் மக்கள் பாதி நாட்கள் தண்ணீருக்காகக் சாவதாகவும், மீதி நாள் தண்ணீரில் இறப்பதாகவும் நாட்கள் செல்கின்றன. இந்த மழை வெள்ளம் அதிகாரிகளுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் உத்தரவிட்டார். இன்னொரு பக்கம் இதே அமர்வு சென்னை வெள்ளம் தொடர்பான வழக்கையும் விசாரணை செய்தது.
சென்னையில் சாலை அகலப்படுத்துவது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு தொடர்பான மனுவை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது. அதில், 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாயில் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும், தற்போது சென்னை மழை நீரில் மிதக்கிறது.
இந்த திட்டம் என்ன ஆனது? ஏன் வெள்ளம் ஏற்பட்டுள்ளது? 2015ம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் என்ன செய்து கொண்டிருக்கிறது மாநகராட்சி. சென்னையில் ஒரு வாரத்தில் நிலைமையை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கும், என்றும் உத்தரவிட்டனர்.