வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மாலை 05.20 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633), கன்னியாகுமரியில் இருந்து மாலை 05.50 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12634) ஆகியவை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
சென்னையில் இருந்து மாலை 05.00 மணிக்கு புறப்படும் செங்கோட்டை வழி கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101), கொல்லத்தில் இருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16102) ஆகியவை டிசம்பர் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் (முறையே இரவு 09.20 மணி மற்றும் இரவு 09.38 மணி) நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.