எப்படி குறைத்து மதிப்பிட்டாலும் பொன்முடியின் குடும்பத்தினர் சுமார் 50000 கோடி அளவுக்கு ஊழல் சொத்துக்களை பதுக்கி வைத்திருப்பார்கள் என பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநில தலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,
தமிழகத்தில் ஏறத்தாள 1500 ஆயிரம் கோடி பணத்தை கடந்த 55 ஆண்டுகளாக தவணை முறையில் காணவில்லை! திருட்டு போயிருக்கிறது! புலனாய்வு அமைப்புகள் ஆராய்ந்து பார்த்ததில் திட்டங்களுக்கு என கஜானாவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது ஆனால் அந்த தொகை திட்டங்களுக்கு போகவில்லை!
கஜானாவில் இருந்து மட்டுமல்லாமல் மக்களிடமிருந்தும் லஞ்சமாக பெருந்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது! கனிமவள கொள்ளை மூலமும் திருடப்பட்டுள்ளது! கஜானாவில் இருந்து திட்டம் என சொல்லி எடுத்தது, லஞ்சமாக மக்களிடமும் அதிகாரிகளிடமும் இருந்து வாங்கியது, கனிமவள கொள்ளையில் திருடியது என மொத்தமாக சேர்த்தால் தொகை 5000 லட்சம் கோடியை தாண்டும்! இத்தனை தொகையும் கடந்த 55 ஆண்டுகாலமாக கழக ஆட்சியினரால் திருடப்பட்டுள்ளது என்பதுதான் வழக்கு!
ஒரு பெரிய திமிங்கலத்தின் வால்மட்டும் இப்போது கையில் கிடைத்திருக்கிறது! அந்த திமிங்கலத்தின் பெயர் பொன்முடி! இந்துமதத்தை அழிப்பதற்காக திகவில் சேருவதற்காக மாசிலாமணி என பெற்றோர் வைத்த பெயரை பொன்முடி என மாற்றி, ”நான் ஹிந்து அல்ல!” ”நான் ஹிந்துவுக்கு எதிரி!” ”நான் ஹிந்துமதத்தை அழிக்க புறப்பட்டவன்” என திராவிடக்கழக மேடைகளில் முழங்கிய அதே வேளையில் அரசு கல்லூரியின் ஆசிரியராக பணியாற்றி அரசு சம்பளம் வாங்கியவர் இவர்!
அரசு வேலையில் இருப்பவர் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பது சட்டமாக இருந்தாலும் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் இவரது கூட்டாளி கட்சிகளாக இருந்ததால், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் இவரின் காலை தொட்டு வணங்கினர்!
தேடப்படும் பல லட்சம் கோடியின் ஒரு பங்கு இவரிடம் இருப்பது தெரிய வந்தாலும் வாலை மட்டும்தான் பிடிக்க முடிந்திருக்கிறது! எஞ்சிய பகுதிகளை கைப்பற்ற மத்திய அரசின் அமலாக்கத்துறை முயன்றுவருகிறது! மாநில லஞ்சஒழிப்புத்துறையின் இன்னொரு வழக்குக்கூட இவர்மீது நிலுவையில் உள்ளது!
குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்கில் திமுகவின் மூத்த அமைச்சர், திராவிட கொள்கையின் போர்வாள், கருணாநிதி தயாளுஅம்மாளின் குடும்ப உறவாக விளங்கிய பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையை வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் கணவன் மனைவிக்கு தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது!
பொதுமக்கள் சொத்தை சுரண்டியதற்காகத்தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது! ஆனாலும் பொதுமக்களுக்கு இந்த தீர்ப்பில் திருப்தி இல்லை!
வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டி அபராதம் விதிக்கும் நீதிமன்றம், ஏன் ரூபாய் ஒரு கோடி மட்டும் அபராதம் விதித்துள்ளது? என மக்கள் கேட்கிறார்கள்! செய்த குற்றத்திற்கு அபராதம்தான் ஒருகோடி (தலா 50 லட்சம்) என்றால், அந்த ஊழல் சொத்தை அரசு பறிமுதல் செய்ய வேண்டுமே! அது செய்யப்படுமா? என்பது பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது!
டி.ஆர்.பாலு, துரைமுருகன், எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், உதயநிதி, ஸ்டாலின் என பட்டியல் நீழும் என மக்கள் காத்துக்கிடக்கிறார்கள்!
புலனாய்வு அமைப்புகளும் தமிழகத்தின் லஞ்ச ஒழிப்புத்துறையும் நீதிமன்றங்களும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் சற்று அதிக வேகம் காட்ட வேண்டும் என்பதே மக்கள் விருப்பமாக உள்ளது!