பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநில மக்களை பற்றி திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசிய வீடியோ மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கும் சூழலில், அமைச்சர் ராஜாவின் எக்ஸ் வலைத்தளப்பதிவை பகிர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில்,
“உத்தர பிரதேசம் – பீகாரில் உள்ள நமது நண்பர்களை திமுக எம்.பி அவதூறாகப் பேசிய இந்த வீடியோவுக்கு திமுக தரப்பில் இருந்து வரும் ஒரே பதில் இந்த வீடியோ பழையது என்பதுதான்.
பிரித்தாளும் கொள்கையில் கட்டமைக்கப்பட்ட கட்சியான திமுக, இன்றும் இத்தகைய மொழியைப் பயன்படுத்தும்போது, அது எப்படி மாறும்? சமீபத்தில், நாடாளுமன்ற அரங்கில், வட மாநிலங்கள் கோமுத்ரா ஸ்டேட்ஸ் என்று, திமுக எம்.பி பேசினார். திமுகவில் என்ன மாற்றம் நடந்துள்ளது?
திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள் இன்றும் இந்த மொழியைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த துஷ்பிரயோகம் செய்பவர்கள் தங்களை வழிநடத்தும் ஒரு அமைச்சரால் ஊக்குவிக்கப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும், உத்தர பிரதேசம், பீகார் மாநிலத்தவர்களைப் பற்றியும், அவர்களின் கல்வி அறிவைப் பற்றியும் விமர்சிக்கும் வகையில், தொழில்துறை அமைச்சரும், திமுக ஐடி விங் செயலாளருமான டிஆர்பி ராஜா பதிவிட்ட ட்வீட்களை அண்ணாமலை பகிர்ந்துள்ளார்.