அரசு மருத்துவரிடம் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகியுள்ள மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதனால் விரைவில் இதன் பின்னணியில் உள்ள திமுகவின் குட்டு அம்பலமாகும் என கூறப்படுகிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியுள்ள திண்டுக்கல் அரசு மருத்துவரும், திமுகவை சேர்ந்தவருமான சுரேஷ்பாபுவிடம் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அப்போது மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் நடந்த சோதனையில்
லஞ்ச ஒழிப்பு அமலாக்கத் துறையின் பல முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றதாக அமலாக்கத்துறை சார்பில் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கியுள்ள அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை அதிகாரிகளும், சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக நேற்று (டிசம்பர் 25) வழக்குப்பதிவு செய்தனர்.
அங்கித் திவாரி மற்றும் அவருக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறும் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு, அவருக்கு பின்னணியில் இருப்போர் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுத்தவர் திமுகவை சேர்ந்த நபர் என்பதால் விசாரணை முடிவில் அவர்களின் குட்டு அம்பலமாகும் என்று கருதப்படுகிறது.