பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக வன்முறை மற்றும் அவமதிப்பு பேச்சு பேசினால் கண்டு கொள்ளாத திராவிட மாடல் அரசு சிறுபான்மை சமூகத்தை எதிர்த்து நியாயமாக விமர்சித்தால் கூட கைது செய்து மிரட்டி வருவது வழக்கம்.
இந்த வகையில் பயங்கரவாதி ஒருவரை விமர்சித்து பதிவு செய்த பாஜகவின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திருச்சி புகழ் மகேந்திரனை திராவிட மாடல் ஏவல் துறை இன்று காலை ( 29.01.2024 ) கைது செய்துள்ளது. அவர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.