தேசத்திற்கு எதிரான சதிச்செயலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேற்று (பிப்ரவரி 02) காலை முதல் சோதனை நடத்தினர்.
திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்லை மதிவாணன் வீடு, சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் தென்னகம் விஷ்ணு என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாட்டை துரைமுருகன் மனைவி மாதராசியிடம் சுமார் 3 மணி நேரம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பிப்ரவரி 7ஆம் தேதி சாட்டை துரைமுருகன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தேசத்திற்கு எதிரான கருத்துக்களை பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் குட்டு விரைவில் வெளிப்படும்.