தமிழ்நாடு சமூக சேவை சங்கத்தின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவை, மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவ சமூக சேவை அமைப்பின் ஒரு அங்கமான தமிழ்நாடு சமுக சேவை சங்கம் செயல்பட்டு வந்தது. இந்த தொண்டு நிறுவனம் ஒரு சமூக அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் சமூக, கல்வி, மதம், பொருளாதார மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி பெற முடியும். இந்தியாவில் உள்ள எந்த ஒரு நிறுவனமும் வெளிநாட்டு நன்கொடை பெற எஃப்.சி.ஆர்.ஏ பதிவு கட்டாயமாகும்.
விதி மீறல் காரணமாக இதன் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த தொண்டு நிறுவனம் இனி வெளிநாட்டு நன்கொடைகளை பெறமுடியாது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு முதல், விதிமீறலில் ஈடுபட்ட 16,000-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.